அவருடைய சமுகத்தில் Jeffersonville, Indiana, USA 62-0909E 1நன்றி, சகோ, நெவில். கர்த்தர் உங்களை அபரிவிதமாய் ஆசீர்வதிப்பாராக, மாலை வணக்கம், நண்பர்களே. மறுபடியுமாக இன்றிரவு என்றென்றும் தவறாத சமுகத்தை உணருவதென்பது ஒரு கம்பீரமான சிலாக்கியமே. உங்களில் அநேகர் இன்றிரவின் சிறு செய்திக்காக தங்கிவிட்டீர்களென்று அறிவேன். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். உங்களில் அநேகர் வீடுகளை அடைவதற்கு இன்றிரவு அதிக தூரம் காரோட்டி செல்ல வேண்டும், சிலர் நீங்கள் தங்கியிருந்த விடுதிகளை காலி செய்துவிட்டதாக கேள்விப்படுகிறேன். உங்களை நீண்ட நேரம் பிடித்து வைக்காமலிருக்க நாங்கள் முயற்சி செய்யப்போகிறோம். நேரத்தோடு வெளியேற வேண்டுமென்ற காரணத்தால்தான் நாங்கள் நேரத்தோடு வந்திருக்கிறோம். 2நாங்கள் எப்பொழுது தொடங்கப் போகிறோம் என்று என்னால் முடிந்தவரை விரைவில் அறிவிப்பேன். இந்த அதிகாரங்களின் பேரில் நாங்கள் எப்பொழுது தொடங்கப் போகிறோம் என்று கேட்டு சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த முறை வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு முத்திரைகளை குறித்து ஏழு இயற்கையான முத்திரைகளைக் குறித்தும் நாம் தொடங்குவோம். அதன் பிறகு நமக்கு நேரம் கிடைத்தால் புத்தகத்தின் பின்புறத்திலுள்ள ஏழு முத்திரைகளை நாம் எடுத்துக் கொள்வோம், பாருங்கள். அது சிறிது நேரம் எடுக்கும். பாருங்கள் திறக்கப்பட்ட ஏழு முத்திரைகள் உள்ளன; ஏழு வாதைகள், ஏழு எக்காளங்கள், ஏழு என்னும் எண்ணிக்கைக் கொண்டு இவை உள்ளன. நாம் முதலில் முத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புத்தகத்தின் பின்புறம் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டுள்ளது. சத்தம் முழங்கினபோது, தானியேல் அதைக் கேட்டான், அதை எழுதுவதற்கு அவன் தடை பண்ணப்பட்டான். யோவானும் அதை எழுத தடை பண்ணப்பட்டான். புத்தகத்திலுள்ள இரகசியங்கள் அனைத்தும் கூறப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட பின்பு, அந்த புத்தகத்தின் பின்புறம் முத்தரிக்கப்பட்டது. தானியேல் அங்கு, “இந்த சத்தங்களின் நாட்களில், தேவனுடைய இரகசியம் அந்த நேரத்துக்குள் வெளிப்பட்டாக வேண்டும்” என்று கூறினதை கவனியுங்கள். பாருங்கள், தேவன் யார் என்னும் “இரகசியம்”, அவர் எப்படி மாம்சமானார் என்பது போன்ற இந்த காரியங்கள் அந்த நேரத்துக்குள் வெளிப்பட்டாகவேண்டும். அதன் பிறகு புத்தகத்தின் பின்புறத்திலுள்ள ஏழு முத்திரைகளுக்கு நாம் ஆயத்தமாகிவிடுகிறோம். அது மனிதனுக்கு வெளிப்படுத்தப்படவில்லை, அது வேதாகமத்தில் எழுதியும் வைக்கப்படவில்லை. ஆனால் அது வேதாகமத்துடன் சரியாக பொருந்த வேண்டும். அது ஒரு பெரிய காரியமாயிருக்குமென்று நினைக்கிறேன். 3எனவே இப்பொழுது நாம் வேகமாக முடிக்க முயல்வோம். உங்கள் தயவுக்காவும் பிரசன்னத்திற்காகவும் நீங்கள் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களை இன்றிரவு நீண்ட நேரம் வைத்திருக்கமாட்டோம் என்று நம்புகிறோம். ஏனெனில் நீங்கள் மிகவும் பொறுமையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், நின்று கொண்டிருக்கிறீர்கள். பின்னால் உள்ள என் மனைவி நேற்றிரவு கூட்டத்தைக் குறித்து என்னிடம் குறிப்பிட்டபோது, “அதிக பருமனுள்ள ஸ்திரீகள் அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களுடைய உடைகள் வியர்வையால் மிகவும் நனைந்திருந்தன. ஆனால் அவர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் கிரகித்துக் கொண்டிருந்தனர்'' என்றாள். ஆகையால்தான் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ் தங்கியிருக்க விரும்புகிறேன். அந்த நிலையில் நீங்கள் வெளி வரும்போது, நீங்கள் ஜனங்களிடம் நேர்மையான சத்தியத்தை எடுத்துரைப்பீர்கள், பாருங்கள், சத்தியத்தைத் தவிர வேறொன்றையும் உரைக்கமாட்டீர்கள். அப்பொழுது அவர்கள் அதில் சார்ந்திருக்கலாம், அது சரியாயிருக்கும். 4இப்பொழுது சில நிமிடங்களுக்கு உங்கள் மன்னிப்பைக் கோர விரும்புகிறேன். இன்று காலை நான் சிறிது சீக்கிரமாக சென்றுவிட்டேன். இப்பொழுது ஒலிநாடாக்கள் இயங்கவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் ஒலிப்பதிவு செய்பவர்களிடம் எப்பொழுது ஒலிநாடாக்களை இயக்க வேண்டுமென்று கூறுவேன். நான் இறங்கு வரிசையில் எண்ணுதல் என்னும் செய்தியை ஐந்து நிமிடங்களில் முடித்துவிட்டு போக வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் நான் மறந்து போய், சென்று விட்டேன். இன்று காலை நான் பரவச நிலையை அடைந்ததால், அதைக் குறித்து ஒன்றும் சொல்லாமலே போய்விட்டேன். ஆனால் ''அந்த இறங்கு வரிசையில் எண்ணுதல் என்ன?'' என்று கேட்டுவிட்டு சென்றேன். பாருங்கள், இப்பொழுது நாம் இறங்கு வரிசையில் எண்ணுதலில் இருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். ஆனால் இறங்கு வரிசையில் எண்ணுதல் என்றால் என்ன? பாருங்கள்? அது என்னவென்று நீங்கள் அறியாமலிருந்தால், ஒருவித குழப்பமடைவீர்கள். எனவே அதை நான் கொண்டு வந்து... இந்த ஒலிநாடாவை இப்பொழுது முடிக்க அதே தொனியில் பேச முயற்சி செய்கிறேன். எனவே இறங்கு வரிசையில் எண்ணுதல் என்னும் ஒலிநாடா இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நீங்கள் எல்லோரும் சிறிது நேரம் என்னை மன்னியுங்கள், இந்த ஒலிநாடாவை முடிக்க விரும்புகிறேன். சிறிது நேரம் என்னை மன்னிப்பீர்களா? அதன்பிறகு நாம் மற்ற செய்திக்கு செல்வோம். இப்பொழுது ஒலிப்பதிவு செய்பவர்களே, உங்கள் ஒலிநாடாவை ஓட்டுங்கள். (ஒலிநாடாவில் காலி இடம், இந்த காணப்படாத பாகம் ஒருக்கால் இறங்கு வரிசையில் எண்ணுதல் என்னும் செய்தியின் 106 முதல் 111 பாராக்களில் காணப்படலாம் - ஆசி). 5வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து, இந்த கடைசி மூன்று செய்திகளில் ஒரு மகத்தான் தருணம் அனுபவித்தோம் - வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு உபதேசங்களின் பேரில் நாம் பேசினோம். இந்த ஒலிநாடாவைக் கேட்கும் ஜனங்கள் தங்கள் ஒலிநாடாவை மாற்றிக் கொள்ள நான் சிறிது இடைவெளி விட வேண்டுமென்று இந்த நேரத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது. நீங்கள் எப்பொழுது அதை போட வேண்டுமென்று சொல்லுகிறேன். சரி. இப்பொழுது, இதை நான் கவனிக்க வேண்டும். இந்த பையன்கள் அந்த ஒலிநாடாவைப் பெற வேண்டும். அவர்கள் இரண்டு செய்திகளையும் கலந்துவிடக் கூடாது. அப்படி செய்தால் ஜனங்களுக்குப் புரியாது. எனவே இதை இவ்விதம் செய்ய வேண்டும். ஜூனியர், அவர்கள் ஒலிநாடாக்களை மாற்றினவுடனே யாராகிலும் ஒலிப்பதிவு அறையை விட்டு வெளியே வந்து சைகை காண்பித்தால் நலமாயிருக்கும். நண்பர்களே, உங்கள் தயவு அனைத்திற்காகவும், எல்லாவற்றிற்காகவும் மீண்டும் உங்களுக்கு என் மிகுந்த நன்றி. சரி, இப்பொழுது நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம், நீங்கள் ஒலிப்பதிவு கருவிகளை இயக்கலாம். 6கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மறுபடியுமாக இன்றிரவு கூடாரத்திற்கு வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி, மறுபடியுமாக இன்றிரவு இந்த இடத்தில் ஜனநெருக்கடி ஏற்பட்டு அநேகர் நின்று கொண்டிருக்கின்றனர், இந்த மூன்று நாட்கள்... மூன்று நேரங்களில் நடந்த இந்த ஆராதனைகளில் யாராகிலும் இந்த ஒலிநாடாவைக் கேட்க நேர்ந்தால், நேற்றிரவு அளிக்கப்பட்ட செய்தியின் ஒலிநாடாவையும் கேட்கும்படியாக அவர்களை கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீடுகளில் அதை ஆராய்ந்து படியுங்கள். அது கர்த்தர் எனக்களித்த ஊழியத்தின் தற்போதைய கட்டம். முக்கியமாக போதகர்கள், அவர்களுடைய சபைகளுக்கு நான் விஜயம் செய்து அவர்களுடைய வீடுகளுக்கு வருவதற்கு முன்பு, அதை கேட்க வேண்டுமென்று விரும்புகிறேன். அந்த ஒலிநாடாவை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இன்று காலை நாங்கள் இறங்கு வரிசையில் எண்ணுதல் என்னும் பொருளின் பேரில், சபை செல்வதற்கு ஆயத்தமாவதைக் குறித்துப் பேசினோம். 7இன்றிரவு, தேவனுக்குச் சித்தமானால், “அவருடைய சமுகத்தில்” என்னும் பொருளின் பேரில் பேசப் போகின்றோம். ஓ, தேவனுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! ஆனால் முதலாவதாக, நீங்கள் அனைவரும் என்னுடன் உங்கள் வேதாகமங்களை ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்துக்கு திருப்ப வேண்டுமென்று விரும்புகிறேன்- ஏசாயாவின் புத்தகம் 6-ம் அதிகாரம். ஏசாயா ஒரு முக்கிய தீர்க்கதரிசி (major prophet) என்றும் அவன் காலத்திலிருந்த மகத்தான தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்றும் நாமனைவரும் அறிவோம். அவன் வாளால் அறுக்கப்பட்டு சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமைக்கு சாட்சியாக ஒரு இரத்த சாட்சியாக தன் வாழ்நாளை முடித்தான். ஏசாயாவின் புத்தகம் 6-ம் அதிகாரம். நான் 5ம் வசனத்திலிருந்து படிக்கிறேன். ''அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன்“ நான் முதலாம் வசனத்திலிருந்தே தொடங்குகிறேன். என்னை சிறிது நேரம் மன்னித்துக் கொள்ளுங்கள். நாம் முதலாம் வசனத்திலிருந்து தொடங்கி 8ம் வசனம் வரைக்கும் வாசிப்போம்: உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கக் கண்டேன்; அவருடைய வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது, சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து, ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள், கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து தன் கையிலே பிடித்த குறட்டல் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி உன் பாவம் நிவிர்த்தியானது என்றான். பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். ஏசா. 6:1 - 8 8கர்த்தர் தமது வார்த்தையை ஆசீர்வதிப்பாராக. இது மிகவும் விசேஷமான ஒரு வேதபாகம் என்பது என் கருத்து. தேவனுடைய சமுகத்தில் மனிதர் தாங்கள் பாவிகளென்று உணருவதை நாம் காண்கிறோம். நாம் வெவ்வேறு இடங்களில் உள்ளபோது நல்லுணர்வு கொண்டு, நாம் நல்லவர் என்று கருதிக் கொள்கிறோம். ஆனால் நாம் எப்பொழுதாகிலும் தேவனுடைய சமுகத்தில் வர நேர்ந்தால், நாம் எவ்வளவு சிறியவர் என்பதை அப்பொழுது உணருகிறோம். 9நியூ ஹாம்ப்ஷயரில் நான் கிறிஸ்துவினிடம் வழிநடத்தின என் நண்பர் பர்ட் கால் என்னும் என் வேட்டை கூட்டாளியுடன் அண்மையில் நான் அடிரன்டாக் மலையிலுள்ள கோல்ட் ப்ருக் நீர் வீழ்ச்சியின் அருகில் நின்று கொண்டிருந்தேன். அது மிகவும் பிரம்மாண்டமான ஒரு நீர் வீழ்ச்சி. அதைக் காண என் குடும்பத்தினரை சென்ற ஆண்டு கொண்டு சென்றிருந்தேன். அந்த நீர் வீழ்ச்சியை அடைய நீங்கள் சாலையை விட்டு இறங்கி நடக்க வேண்டும். ஊதா, பச்சை நிறம் கொண்ட தண்ணீர் மிகுந்த சக்தியுடன் பாறைகளின் மேல் பெருக்கெடுத்து ஓடி வருவதை நாங்கள் கண்டோம். பர்ட் அங்கு நின்று கொண்டு என்னை நோக்கி, “ஏய், பில்லி, இதைக் காணும்போது மனிதன் எவ்வளவு சிறியவன் என்று நினைக்கத் தோன்றுகிறது. அவன் தன் விரலில் அளந்தால் கால் அங்குலம் தான் இருப்பான்” என்றான். நான், ''அது உண்மை, பர்ட்“ என்றேன். தேவனுடைய சமுகத்தில் பிரவேசித்து அவருடைய சிருஷ்டிப்பை காண அவன் அவ்வளவு மாத்திரமே அறிந்திருந்தான். 10''நீர் எவ்வளவு மகத்தானவர்“ (How great Thou art!) பாடலை எழுதியவர் ஒரு இரவு ஆகாயத்தை நோக்கி நட்சத்திரங்கள் எவ்வளவு தூரம் உள்ளன என்பதை உணர்ந்திருப்பார். சில மாதங்களுக்கு முன்பு நானும் சகோ. பிரட்டும் சகோ. உட்ஸும் சகோ. மக்னெல்லியுடன் அரிசோனா வனாந்தரத்தில் நின்று கொண்டு ஒரு நட்சத்திரத்துக்கும் அதற்கு அருகில் காணப்பட்ட மற்றொரு நட்சத்திரத்துக்கும் இடையேயுள்ள தூரத்தை அளக்க முயன்று கொண்டிருந்தோம். அவையிரண்டுக்குமிடையே தூரம் பல கோடி மைல்கள். ஆனால் இங்கிருந்து காணும்போது அவைகளுக்கிடையே கால்அங்குலம் தூரம் கூட இல்லாதது போல் காணப்படுகிறது. அதன் பிறகு நாங்கள் சிந்திக்கத் தொடங்கினோம். விஞ்ஞான நிரூபணத்தின்படி, இங்கிருந்து நட்சத்திரங்கள் வரைக்கும் உள்ள தூரத்தைக் காட்டிலும் அவைகளுக்கிடையே உள்ள தூரம் அதிகம். பாருங்கள் அது எப்படியுள்ளதென்று? 11அதன் பிறகு, நாங்கள் அவருடைய சமுகத்தை நாம் நெருங்கும் தோறும் அவர் எவ்வளவு மகத்தானவர் என்றும், நாம் எவ்வளவு சிறியவர் என்றும் அறிகிறோம் என்பதை உணர்ந்தோம். எப்படியானாலும் ஜனங்கள் தேவனுடைய சமுகத்துக்கு வரும் போது அது அவர்களுக்கு ஒரு பெரிய பாதிப்பை உண்டு பண்ணுகிறது. தேவனுடைய சமுகம் ஒரு இடத்தை அடைந்து, ஒரு நபரை மேடைக்கு கொண்டு வந்து, அவருடைய வாழ்க்கையில் நடந்தவைகளை வெளிப்படுத்தி, அவர்கள் செய்த பாவங்களையும் நடத்தை கெட்ட செயல்களையும் எடுத்து கூறும்போது, அது ஜனங்களில் ஒரு பரிசுத்த அமைதியை உண்டாக்கி, அவர்கள் ஜெப வரிசையை விட்டு விலகி பீடத்தண்டை ஒடிவந்து தேவனுடன் சரிபடுத்திக் கொண்டு, ஜெபித்துக் கொள்ளப்படுவதற்காக மறுபடியும் அவருடைய சமுகத்தில் வருவதை என் ஊழியத்தில் நான் கண்டிருக்கிறேன். பாருங்கள், தேவனுடைய சமுகத்தில் வருவதில் ஏதோ ஒன்றுண்டு, அது காரியங்கள் நிகழும்படி செய்கிறது. ஜனங்கள் கட்டில்களிலும் டோலிகளிலும் படுத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். 12அன்றிரவு மெக்ஸிகோவில், அந்த ஸ்பானிஷ் தாய், இல்லை மெக்ஸிகன் தாய், மரித்துப் போன தன் சிறு குழந்தையை கம்பளத்தில் சுற்றிக் கொண்டு வந்தாள். அந்த கூட்டத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கானோர் - ஐம்பதாயிரம் முதல் எழுபத்தையாயிரம் பேர் இருக்கும். அந்த சிறு குழந்தை உயிர் பெற்று எழுந்ததைக் கண்ட போது, பெண்கள் மயங்கி விழுந்தனர். ஜனங்கள் கைகளை உயர்த்தி கூச்சலிட்டனர். ஏன்? ஒருமனிதன் இதைச் செய்ய முடியாதென்றும் அவர்கள் சர்வ வல்லமையுள்ள தேவனின் சமுகத்தில் இருப்பதையும் அவர்கள் உணர்ந்தனர். அது ஒன்று நடக்கக் காரணமாயிருந்தது. 13தேவ பக்தியுள்ள மனிதர் பேசுவதைக் கேட்கும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. சார்லஸ் ஃபின்னி என்பவரைக் குறித்து ஒரு காலத்தில் இவ்வாறு கூறப்பட்டது. அவர் சிறு உருவம் படைத்தவர், அவருடைய எடை ஏறக்குறைய நூற்று பத்து பவுண்டு. ஆனால் அவர் மிகவும் வல்லமையோடு பேசும் திறன் வாய்ந்தவர்... அவர் ஒரு நாள் கட்டிடத்தில் ஒலி எவ்விதம் கேட்கிறது என்று அறிய முயன்றார். அக்காலத்தில் ஒலிப்பெருக்கிகள் கிடையாது. அங்கு ஒரு மனிதன் மாடியின் முன் பாகத்தில் கூரையைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தான். அவர் உள்ளே வருவதை அவன் கண்டான். ஆனால் அவர் யாரென்று அவனுக்குத் தெரியாததனால் சும்மா இருந்துவிட்டான். திரு. ஃபின்னி ஒலி எவ்விதம் கேட்கிறது என்று அறிய முயன்றார். அவர் நடத்தவிருக்கும் அந்த எழுப்புதல் கூட்டங்களுக்கு அதிக நேரம் ஜெபத்தில் தரித்திருந்த பிறகு, அவருடைய சத்தம் அந்த கட்டிடத்தில் கேட்கிறதா என்று பரிசோதிக்க விரும்பினார். அவர் வேகமாக பிரசங்க பீடத்துக்குச் சென்று, ''மனந்திரும்பு அல்லது அழிந்து போ!'' என்று சொன்னார். அவர் தேவனுடைய அபிஷேகத்தின் கீழ் அதை மிகுந்த வல்லமையுடன் கூறினபோது கூரையைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த மனிதன் தரையில் விழுந்தான். கட்டிடத்தின் மேலிருந்து தரைக்கு விழுந்தான். 14அவர் சுவிசேஷத்தை மிகவும் வல்லமையுடன் பிரசங்கித்தார். மஸஷஸட்ஸில் உள்ள போஸ்டனில் அவர் ஒரு கட்டிடத்தின் தூண்களுக்கிடையே இருந்த சன்னலில் நின்று கொண்டு பிரசங்கித்தார். ஏனெனில் அவருடைய கூட்டங்களுக்கு வந்த திரளான ஜனங்களைக் கொள்ள எந்த ஆலயத்திலும் போதிய இடம் இல்லை. அவர் அங்கு நின்று கொண்டு மிகுந்த வல்லமையுடன் நரகத்தைக் குறித்தும் மற்றவைகளைக் குறித்தும் பிரசங்கித்தபோது, கூடைகளை பிடித்துக் கொண்டு வேலையிலிருந்து திரும்பி வந்த மனிதர் சாலைகளில் முகங்குப்புற விழுந்து இரக்கத்துக்காக அலறினர். தேவனுடைய சமுகத்தில் மகத்தான பிரசங்கிமார்கள் தேவனுடைய வார்த்தையின் மூலம் தேவனுடைய சமுகத்தை கூட்டத்தினரிடம் கொண்டு வரமுடிந்தது! தேவனுடைய சமுகத்தை உணர்ந்து கொள்ள முடியாதபடிக்கு மனிதனின் இருதயங்கள் கடினப்படுவதென்பது தூரமாயிருப்பதாக! அது தூரமாயிருப்பதாக! 15முதலாம் மனிதன் தவறு செய்து பாவத்தில் பிரவேசித்த பிறகும், தேவன் அவனுடைய சமுகத்தில், அதாவது அவன் தேவனுடைய சமுகத்தில் வந்து, தேவன் அவனை ''ஆதாமே'' என்று கூப்பிட்டபோது, அவனால் தேவனுடைய சமுகத்தில் நிற்க முடியவில்லை. அவன் ஓடிப்போய் புதரின் பின்னால் ஒளிந்து கொண்டு, அத்தி இலையினால் தன்னை மறைத்துக் கொள்ள முயன்றான். ஏனெனில் அவன் சிருஷ்டி கர்த்தராகிய யேகோவாவின் சமுகத்தில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். முதலாம் மனிதன் பாவம் செய்து, தன்ஆத்துமாவில் பாவத்தைக் கொண்டவனும் தேவனுடைய சமுகத்தில் வந்தபோது அவனுக்கு உண்டான உணர்ச்சி இதுவே. அவனால் மறைக்க முடியவில்லை. ஏனெனில் அவன் இன்னும் மிருதுவாயிருந்தான். பாவம் இன்று ஜனங்களின் இருதயங்களில் வேர் கொண்டுள்ளது போல அப்பொழுது இல்லை. அவன் தன் சிருஷ்டி கர்த்தரின் முன்னால் நின்று கொண்டிருப்பதை நன்றாக அறிந்திருந்தான். அவன் புதர்களின் பின்னால் ஒளிந்து கொண்டு வெளியே வரவில்லை. தேவன் அவனுக்காக ஒரு ஆயத்தத்தைச் செய்யும் வரைக்கும், அவனால் வெளியே வரமுடியவில்லை. 16நாம் வேதாகமத்துக்குச் சென்று ஆதியாகமம் 17ம் அதிகாரம் 3ம் வசனத்தில், அந்த மகத்தான கோத்திரப் பிதா ஆபிரகாம் தேவனுடைய சமுகத்தில் வந்ததைக் காணலாம். தேவன் அவனுடன் (17-ம் அதிகாரத்தில்) சர்வ வல்லமையுள்ள தேவனின் நாமத்தில் பேசின போது, அவன் முகங்குப்புற விழுந்தான். அந்த மகத்தான முற்பிதா, தேவனுடைய ஊழியக்காரன், அவருக்கு இருபத்தைந்து ஆண்டு காலமாக விசுவாசத்தோடு ஊழியம் செய்தபோதிலும், அவனால் தேவனுடைய சமுகத்தில் நிற்க முடியவில்லை. தேவன் அவனிடம் வந்தபோது, அந்த கோத்திரப்பிதா முகங்குப்புற விழுந்தான், ஏனெனில் அவனால் தேவனுடைய சமுகத்தில் நிற்க முடியவில்லை. 17யாத்திராகமம் 3-ம் அதிகாரத்தில், தேவனுடைய மகத்தான ஊழியக்காரனும் தீர்க்கதரிசியுமாகிய மோசே வனாந்தரத்தில் பின்புறத்தில் இருந்தபோது, அவன் ஒரு பரிசுத்தமுள்ள மனிதனாக இருந்தான் என்று காண்கிறோம். அவன் ஒரு நோக்கத்துக்காக பிறந்திருந்தான். அவன் தன் தாயின் கர்ப்பத்திலிருந்தே தீர்க்கதரிசியாக இருக்கப் பிறந்திருந்தான். அவன்தன் ஜனங்களை விடுவிக்க கல்வியறிவையும் இன்னும் மற்றெல்லாவற்றையும் பெற முயன்று வந்தான், ஏனெனில் அவன் தன் ஜனங்களை விடுவிக்கவேண்டும் என்பதை அறிந்திருந்தான். ஆனால் அவன் அதை வேத சாஸ்திர பிரகாரமாக அறிந்திருந்தபடியால், அவன் பயிற்சி பெற்றான். அவன் நன்றாக படித்து தேறினான். அவன் உலகிலேயே மிகவும் அறிவாளிகளான எகிப்தியர்களுக்கு ஞானத்தைப் புகட்டினான். அவன் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்திருந்தான். அவன் ஒரு பெரிய இராணுவ வீரன். ஆனால் ஒரு நாள் வனாந்தரத்தில் பின்புறத்தில் அவன் தேவனுடைய சமுகத்தில் வந்த போது, அவன் நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்பதை அறிந்து கொண்டு, தன் பாதரட்சைகளைக் கழற்றிப் போட்டு முகங்குப்புற விழுந்தான். அவன் தேவனுடைய சமுகத்தில் வந்தபோது, அவனால் நிற்க முடியவில்லை. அவன் ஆபிரகாமைப் போல் முகங்குப்புற விழுந்தான். அவனால் தேவனுடைய சமுகத்தில் நிற்க முடியவில்லை. 18யாத்திராகமம் 19:19ல், ஆபிரகாமின் நாட்கள் முதற்கொண்டு தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள்; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். யாக்கோபு கோத்திரப் பிதாக்களைப் பெற்றான். இவ்விதம் ஆண்டுகள் தோறும் வழிவழியாக பரிசுத்த மனிதர், பெரியவர்கள், தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள், தெரிந்து கொள்ளப்பட்ட ஜாதி, பரிசுத்தமாக்கப்பட்ட பரிசுத்த ஜனங்கள் தோன்றி தங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனை சேவித்தனர். ஒரு நாள் தேவன் மோசேயிடம், “நீ இஸ்ரவேல் ஜனங்களை இங்கு கூடி வரச் செய். நான் அவர்களிடத்தில் பேசப் போகிறேன்'' என்றார். ஆனால் தேவன் சீனாய் மலையின் மேல் இறங்கி வந்தபோது மலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. புகை சூளையின் புகையைப் போல் எழும்பிற்று. தேவனுடைய சத்தம் முழங்கிற்று. இஸ்ரவேல் ஜனங்கள் முகங்குப்புற விழுந்து, ''மோசே பேசட்டும். தேவன் பேச வேண்டாம், அவர் பேசினால் நாங்கள் மரித்துப் போவோம்“ என்றனர். மனிதன் தேவனுடைய சமுகத்தில், தான் பாவி என்பதை உணருகிறான்! அவர்கள் ஒவ்வொருவரும் நியாயப் பிரமாணத்தின்படி விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தனர். அவர்கள் கற்பனைகளைக் கைக்கொண்டு வந்தனர். இருப்பினும்அவர்கள் தேவனுடைய சமுகத்தில் வந்து தேவன் பேசினபோது, அவர்கள் சரியாயில்லை என்பதை உணர்ந்தனர். அவர்கள் தேவனுடைய சமுகத்தில் வந்ததனால், அவர்களிடம் ஏதோ ஒன்று குறைவாயிருந்ததை அறிந்துகொண்டனர். ஆம், அவர்கள், ”மோசே பேசட்டும், தேவன் பேச வேண்டாம். தேவன் பேசினால் நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம். மோசே எங்களுடன் பேசட்டும்“ என்றனர். 19லூக்கா 5:8-ல் பேதுரு... ஓ, அவன் மிகவும் பிடிவாதமுள்ள மனிதன், செல்வாக்கு நிறைந்தவன், அதிகாரம் பெற்றிருந்தவன் என்று நாம் காண்கிறோம். அவன் எல்லாரையும் மிரட்டுபவன் (bully), ஒரு பெயர் பெற்ற செம்படவன். ஆனால் காண்பதற்கு சாதாரண மனிதரைப் போல் இருந்த ஒருவர் தேவனுடைய அற்புதத்தைச் செய்ததை அவன் கண்டபோது, அத்தனை மீன்களையும் வலையில் அகப்பட வைத்தவர் மனிதரைக் காட்டிலும் மேலானவராக இருக்க வேண்டும் என்பதை அவன் அந்நேரத்தில் உணர்ந்து கொண்டான். அவன் மீன் பிடிப்பதில் பெற்றிருந்த கல்வியையும் அறிவையும் உபயோகப்படுத்தி இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் அகப்படவில்லை. அப்பொழுது யாரோ ஒருவர், ''உன் வலையைப் போடு“ என்று சொல்வதைக் கேட்டான். அவன் வலையை இழுக்கத் தொடங்கின போது, அதில்திரளான மீன்கள் இருந்தன. அப்பொழுது அவன் ஒரு பாவியான மனுஷன் என்பதை உணர்ந்தான். அவன், ''ஆண்டவரே, நான் பாவியான மனுஷன். நீர் என்னை விட்டுப் போகவேண்டும்'' என்றான். யார் அப்படி சொன்னது? பரி. பேதுரு அவன் தேவனுடைய சமுகத்தில், தான் பாவி என்பதை உணர்ந்ததனால், அவனை விட்டுப்போகும்படி தேவனைக் கேட்டுக் கொண்டான். ஆபிரகாம், தான் “தவறு” என்பதை உணர்ந்தான். ஆதாம், தான் ''தவறு“ என்பதை உணர்ந்தான். அவன் தேவனுடைய குமாரன். அவன் தன்னுடைய தவறை உணர்ந்தான். மோசே, தான் ''தவறு” என்பதை உணர்ந்தான். இஸ்ரவேல் ஜனங்கள், ஒரு சபையாகவும் ஒரு ஜாதியாகவும், தாங்கள் ''தவறு'' என்பதை உணர்ந்தனர். ''நான் பாவியான மனுஷன், என்னை விட்டுப் போக வேண்டும்“, அவன், ”நான் பரிசுத்தமுள்ளவன், இதை பெற்றுகொள்ளத் தகுதியுள்ளவன்'' என்று கூறவில்லை. அவன், ''நான் பாவியான மனுஷன்“ என்றான். 20ஒருநாள், தன்னை மதாபிமானி என்றுஅழைத்துக் கொண்ட ஒருவன்; அவன் கமாலியேல் என்னும் பெயர் பெற்ற ஒரு சிறந்த வேத ஆசிரியரிடம் வேத சாஸ்தி ரம் அனைத்தும் கற்றுத் தேர்ந்தவன். அவனுடைய பெயர் தர்சு பட்டணத்தானாகிய சவுல். அவன் தான் பவுல் என்று நமக்குத் தெரியும். அவன் முழுக்க முழுக்க மதாபிமானி. அவன் யூத மார்க்கத்தின் எல்லா நுணுக்கங்களையும் அறிந்திருந்தான். அவன் பரிசேயரில் பரிசேயனும், எபிரெயரில் எபிரெயனுமாயிருந்தான். அவன் பரிசேயரில் புகழ் வாய்ந்தவன். கல்வியறிவில் சிறந்தவன், அறிவாளி, விவேகமுள்ளவன், படித்தவன், குழந்தை பருவம் முதற் கொண்டு தேவனை அறிந்திருந்ததாக உரிமை பாராட்டினவன். ஆனால் ஒரு நாள் அவன் தமஸ்குவுக்குப் போகும் வழியில் அந்த அக்கினி ஸ்தம்பம் அவன் மேல் பிரகாசித்தது. அவன் தரையில் மண்ணில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?” என்று கேட்டான். அவன் பெற்ற பயிற்சி, அவனுடைய வேதசாஸ்திர பயிற்சி, கல்வியறிவு அனைத்தும், அவன் தேவனுடைய சமுகத்தில் நின்றபோது, பயனற்றதாய் போயிற்று. 21இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டு, அதுவே இன்றைக்கும் பொருந்தும் என்று கூற விரும்புகிறேன். நீங்கள் டிடி.பி எச்.டி போன்ற பட்டங்களைப் பெற்றிருக்கலாம், உங்கள் சிறு வயது முதற்கொண்டு ஆலயத்துக்கு சென்றிருக்கலாம். மத சம்பந்தமான சடங்குகள் அனைத்தும் செய்திருக்கலாம். ஆனால் ஒரு முறை நீங்கள் தேவனுடைய சமுகத்தில் வருவீர்களானால் நீங்கள் மிகவும் சிறியவர்கள் என்றும், ஒன்று மற்றவர்கள் என்பதையும் அறிந்து கொள்வீர்கள். பவுல், தான் தவறு என்பதை உணர்ந்து, வல்லமையினால் ஆட்கொள்ளப்பட்டு முகங்குப்புற விழுந்தான். அவன் மேல் நோக்கி, அவன் பிரசங்கித்துக் கொண்டிருந்த அதே தேவனை கண்டு, தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து அவருக்கு விரோதமாக பிரசங்கம் செய்து கொண்டு வந்ததை எண்ணிப் பார்த்து, தன் தவறை உணர்ந்து தரையில் முகங்குப்புற விழுந்தான், ஏனெனில் அவன் தேவனுடைய சமுகத்தில் இருந்தான். அவன் அந்த அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டான். 22வெளிப்படுத்தல் 1:7ல் கூறப்பட்டுள்ள அந்த மகத்தான பரி. யோவானைக் குறித்தென்ன? அவனுக்கு தரிசனம் காண்பிக்கப்பட்டு, அவன் பார்த்தபோது, அவனுடன் பேசின ஒரு சத்தத்தை கேட்டான். அந்த சத்தத்தைப் பார்க்க அவன் திரும்பினபோது, ஏழு பொன் குத்து விளக்குகளைக் கண்டான். அந்த ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார், அவருடைய சிரசும் மயிரும் உறைந்த மழையைப் போல் வெண்மையாய் இருந்தது, அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது, அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தன. அவர் நிலையங்கி தரித்து மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. அந்த மகத்தான பரி. யோவான் இயேசுவுடன் கூட நடந்து, அவருடைய மார்பில் சாய்ந்திருந்து, இவைகளையெல்லாம் செய்திருந்தான். இன்று காலை நான் கூறினது போல், பவுலின் ஊழியம் இவர்களுடைய ஊழியம் அனைத்தையும் மிஞ்சிவிட்டது. யோவான் இயேசுவுடன் கூடநடந்து, அவருடன் உரையாடி, அவருடன் உறங்கி, அவருடன் புசித்திருந்தபோதிலும், அவன் அவரை அந்த மகிமையின் நிலையில் நிற்கக் கண்டபோது, செத்தவனைப் போல் அவருடைய பாதத்தில் விழுந்ததாகக் கூறுகிறான். ஆமென். அதை சிந்தித்துப் பாருங்கள்! 23நாம் சபைக்கு வந்து தேவனைக் குறித்துப் பேசி அவரைத் துதித்து இவையனைத்தும் செய்யலாம். ஆனால், ஓ, சகோதரனே, அவர் வருவதை நாம் காணும்போது, நம்முடைய இருதயங்களில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கும்! சபைக்குச் சென்று தசமபாகம் செலுத்துவதனால் நம்முடைய மதசம்பந்தமான கடமைகளை நாம் செய்வதாக நினைக்கலாம். நாம் சபையின் சட்ட திட்டங்களை கடைபிடித்து, ஸ்தாபன பிரமாணங்கள் அனைத்தையும் உச்சரிக்கலாம். ஆனால் நாம் ஒருமுறை அவரைப் பார்த்துவிட்டால், எல்லாமே முழுவதுமாக மாறிவிடும். ஆம், அது நிச்சயம். இந்த மகத்தான மனிதன், பரி. யோவான், அப்படிப்பட்ட ஒரு பெரிய மனிதன் ''செத்தவனைப் போல் அவருடைய பாதத்தில் விழுந்ததாக“ வெளி. 1:17, உரைக்கிறது. அவன் கிறிஸ்துவுடன் மூன்றரை ஆண்டுகள் ஐக்கியம் கொண்டிருந்தான், அவன் நிரூபங்களை எழுதினவர்களில் ஒருவன், அவருக்குப் பிறகு அவன் எழுதினான், அவருடன் அவன் மேசையில் புசித்தான், அவருடன் படுக்கையில் உறங்கினான். அவர் சென்றயிடமெல்லாம் கூட சென்று அவருடன் ஐக்கியங் கொண்டான், ஆனால் அவரைப் பார்க்க அவன் திரும்பினபோது, அவனுக்குள் உயிர் இல்லை. அவன் செத்தவனைப் போல் தரையில் விழுந்தான். சரி. 24நாம் ஏசாயாவைக் காண்கிறோம். இப்பொழுது நாம் படித்த வேதபாகத்தில் ஏசாயா 6:5ல்; இவன் ஒரு பெரிய வல்லமையுள்ள தீர்க்கதரிசி, வேதத்திலுள்ள மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவன், வேதாகமத்தில் அறுபத்தாறு புத்தகங்கள் உள்ளன. ஏசாயா ஆதியாகமத்தில் தொடங்கி, நடுவில் புதிய ஏற்பாட்டின் சம்பவங்களைக் கொண்டு வந்து, ஆயிரம் வருட அரசாட்சியில் முடிக்கிறான் - அப்படியே ஆதியாகமம், புதிய ஏற்பாடு, வெளிப்படுத்தின விசேஷம். பரிபூரணமானது! ஏசாயா முக்கிய தீர்க்கதரிசிகளில் ஒருவன். அவன் அந்த ராஜா உசியாவின் கரங்களில் சார்ந்திருந்தான். உசியா அவனை விட்டு எடுக்கப்பட்ட போது, அவன் சோர்வடைந்தான். அவன் மிகவும் நல்லவன், நீதியுள்ளவன், அந்த நீதியுள்ள ராஜா (நல்ல ராஜா) அவனை பரிசுத்த மனிதனாகக் கருதி, அவனுடைய தேவாலயத்தில் அவனை வைத்திருந்தான். 25ஏசாயா தரிசனங்கள் கண்டான். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் வார்த்தையைப் பிரசங்கித்தான். அவன் ஒரு ஊழியக்காரன், அவன் பரிசுத்த மனிதன். ஆனால் ஒரு நாள் அவன் தேவாலயத்தில் நின்று கொண்டிருந்தபோது ஆவிக்குள்ளாகி தேவனுடைய மகிமையைக் கண்டான். தேவதூதர்கள் தங்கள் இரண்டு செட்டைகளால் தங்கள் முகத்தை மூடி, தங்கள் இரண்டு செட்டைகளால் தங்கள் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து, ''சேனைகளின் கர்த்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்'' என்று ஆர்ப்பரிப்பதை அவன் கண்டான். அப்பொழுது அந்த தீர்க்கதரிசி, தான் ஒன்றுமற்றவன் என்பதை உணர்ந்தான். அவன், “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” என்றான். ஒரு தீர்க்கதரிசி, வேதத்திலுள்ள மிகவும் வல்லமையுள்ள தீர்க்கதரிகளில் ஒருவன், ''நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன். தேவனுடைய மகிமையை என் கண்கள் கண்டதே, ஆகையால் ஐயோ! நான் அதமானேன்“ என்றான். 26அந்த தேவதூதன் சத்தமிட்டபோது தேவாலயத்தின் நிலைக்கால்கள் அசைந்தன என்று அவன் கூறுகிறான். சகோதரனே, அது உன்னை நடுங்கச் செய்ய வேண்டும்! தேவாலயத்தின் நிலைக்கால்கள் மாத்திரம் அசையப் போவதில்லை, வானம் பூமி முழுவதும், அவர் மறுபடியும் வரும்போது, அசையப் போகின்றன. மலைகள் ஓடிப்போம், சமுத்திரம் மறைந்து போம். சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்தினின்று எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்“ என்னும் அலறுதல் உண்டாகும். அது ஒரு பயங்கரமான நேரமாயிருக்கும். பாவியாகிய நண்பனே, அதை சிந்தித்துப் பார்ப்பது நலமென்று உனக்குச் சொல்லுகிறேன். அது உண்மை. ஏசாயா, “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்தமான ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், இவர்களுக்கு அசுத்த உதடுகள் உள்ளன'' என்றான். 27இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அப்படிப்பட்ட பரிசுத்த மனிதர் தேவனுடைய சமுகத்தில் தங்களைப் ''பாவிகளாக“ கருதினபோது, பாவியும் தேவ பக்தியில்லாதவர்களும் அந்நாளில் என்ன செய்வார்கள்? கூட்டங்களில் உட்கார்ந்திருக்கும் ஜனங்கள் அந்நாளில் என்ன செய்வார்கள்? தேவனுடைய வல்லமையைக் கண்டு, வார்த்தையின் இறங்கு வரிசை எண்ணிக்கையை கேட்டு, தேவன் தம்மை வெளிப்படுத்துவதைக் கண்டு, எவ்வித சந்தேகமுமின்றி தேவனுடைய வார்த்தை நிறைவேறினதைக் கண்ட ஜனங்கள் அந்நாளில் என்ன செய்வார்கள்? இவர்கள் மறுபடியும் பிறந்து பரிசுத்த ஆவியைப் பெறாமலேயே பரலோகம் செல்ல முயல்கின்றனர். ''நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தி இல்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?“ என்று வேதம் கூறுகிறது. நமக்கு முன்னால் தேவன் தம்மை வெளிப்படுத்தினதையும் தேவனுடைய மகிமையையும், வார்த்தையை ஆதாரமாகக் கொண்ட அக்காலத்து தீர்க்கதரிகளும் ஞானதிருஷ்டிக்காரரும் கண்ட விதமாகவே நாமும் கண்டு அவர்கள் அழுது முகங்குப்புறவிழுந்து, ''நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்'' என்று அலறினர் என்றால், நாம் எந்த நிலையில் இருக்கப் போகிறோம்? தன் பாவங்களை அறிக்கையிடவும் மனமில்லாத ஒரு மனிதனின் கதி அந்நாளில் என்னவாயிருக்கும்? தன் பாவங்களை அறிக்கையிட மனமில்லாத வாலிபனின் அல்லது வாலிபப் பெண்ணின் கதி என்னவாயிருக்கும்? தேவனுடைய சிருஷ்டிப்பைக் குறித்து தேவனைக் காட்டிலும் தனக்கு அதிகம் தெரியுமென்று நினைத்துக் கொண்டிருக்கிற இருதயக் கடினமுள்ள மனிதனின் கதி என்னவாயிருக்கும்? வேதம் தவறென்று நிரூபிக்க தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்ட அந்த மனிதன் எங்கே நிற்பான்? அதை சிந்தித்துப் பாருங்கள்! 28இது சுவிசேஷகம். ஜனங்கள் அசைக்க வேண்டிய நேரம் இதுவே, ஒரு நேரம் வரும் என்று தேவன் சொன்ன நேரம் இதுவே. அவர் ஒரு காலத்தில் சீனாய் மலையை அசைத்தார், ஒரு அசைத்தல் மறுபடியும் வருகிறது. அப்பொழுது அவர் சீனாய் மலையை மட்டுமல்ல, அசைக்க முடியும் எல்லாவற்றையும் அசைப்பார், அந்த வேத வசனத்தின் எஞ்சிய பாகத்தை கவனித்தீர்களா? ''ஆனால் நாமோ அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறோம்“ அல்லேலூயா! வானங்கள் அசையும், பூமி அசையும். ”வானமும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் அந்த வார்த்தையோ ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை. இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை''. அசைக்க முடியும் ஒவ்வொன்றும் அசைக்கப்படும். ஆனால் நாமோ ஒரு ராஜ்யத்தைப் பெறுகிறோம். அது தேவனுடைய வார்த்தையே. தேவனே தமது வார்த்தையாயிருக்கிறார். அவர் தம்மை அசைத்துக் கொள்வதில்லை. ஆமென்! ஓ, என்னே! ''நாமோ அசைவில்லாத ஒரு ராஜ்யத்தைப் பெறுகிறோம்''. அது அசைக்கப்பட முடியாதென்று எபிரெயர் நிரூபத்தை எழுதின பவுல் கூறுகிறான். 29அப்படிப்பட்ட ஒரு நபர், அப்படிப்பட்ட ஒரு மனிதன், அப்படிப்பட்ட ஒரு நேரம். அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்! நமக்கும் நம்முடைய நேரம் உண்டாயிருந்தது? அந்த மனிதரைப் போல் நாமும் தேவனுடைய மகிமையைக் கண்டோம். ஆபிரகாம் கண்டது போல நாமும் தேவனுடைய மகிமையைக் கண்டோம், அதே அக்கினி ஸ்தம்பம், அதே தேவனுடைய வல்லமை, அதே கிறிஸ்து தம்மை வெளிப்படுத்தி, தம்மைக் காண்பித்து, இந்த கடைசி நாட்களில் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார். அப்படியிருக்க, இங்கு நாம் வந்து தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல், எப்படி கோட்பாடுகளையும் ஸ்தாபனங்களையும் பற்றிக் கொண்டிருக்க முடியும்? அந்நாளில் நம்முடைய கதி என்னவாயிருக்கும்? நாம் தேவனுடைய மகிமையைக் கண்டிருக்க, நமக்கு அந்நாளில் என்ன நேரிடும்? 30சிலர் நின்று கொண்டு இதைப் பார்த்து கேலி செய்கின்றனர், சிலர் இதைப் பார்த்து சிரிக்கின்றனர், சிலர் இதை மூடமதாபிமானம் என்றழைக்கின்றனர், சிலர் இதை மனோதத்துவத்தினால் மனிதரின் சிந்தனைகளை வெளிப்படுத்துதல் (mental telepathy) என்கின்றனர், சிலர் இதை பெயல்செபூல் என்றழைக்கின்றனர், சிலர் இதை ஏதோ ஒரு பெயரால் அழைக்கின்றனர். ''தேவ தூதர் நடக்கப் பயப்படும் பாதையில் மூடர்கள் ஆணியடிக்கப்பட்ட காலணிகளைப் போட்டுக் கொண்டு நடக்கின்றனர்“ என்னும் ஒரு பழமொழி உண்டு. அது உண்மை. ''தேவன் இல்லை என்று மதி கெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்கிறான்” தேவன் தமது சொந்த வார்த்தையினால் (கோட்பாட்டினால் அல்ல, தமது வார்த்தையினால்) தம்மை மிகவும் பரிபூரணமாக வெளிப்படுத்துவதை அவன் கண்ட பிறகு, அதைக் குறித்து கேலி செய்தால், அவன் ஒரு முட்டாள். ஏனெனில் தேவன் வார்த்தையாயிருக்கிறார், அவர் தம்மை அவர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாதவன் “மதிகெட்டவன்” என்று வேதம் உரைக்கிறது. அந்த இடத்தில் அவன் நிற்கும்போது அவனுடைய கதி என்னவாயிருக்கும்? தேவ பக்தியில்லாத அந்த மனிதனுக்கு அந்த நாள் பயங்கரமாயிருக்கும். 31ஆனால் மனந்திரும்பின பாவிகள் பயப்படத் தேவையில்லை. ஓ, இல்லை. மனந்திரும்பும் ஒரு பாவி, இரத்தம் தோய்ந்த பலி அவனுடைய இடத்தில் நின்று கொண்டு காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறான். எனக்கு ஆறுதலை அளிப்பது அதுவே தான். நான் தேவனுடைய மகிமையைக் கண்டிருக்கிறேன், அவருடைய வல்லமையை நான் உணர்ந்திருக்கிறேன். அவருடைய கரத்தின் தொடுதலை நான் அறிந்திருக்கிறேன். அவருடைய சிட்சித்தலின் தொடுநிலையை நான் அறிந்திருக்கிறேன். அவர் தேவனென்று எனக்குத் தெரியும். நான் இழக்கப்பட்டேன் என்று அறிகிறேன், ஆனால் அங்கே ஒருவர் எனக்காக நின்று கொண்டிருக்கின்றார். ஆமென். அங்கே ஒருவர் நின்று கொண்டு, “பிதாவே, அவனுடைய அக்கிரமத்தை எல்லாம் என் மீது வைத்துவிடும், ஏனெனில் அவன் பூமியின் மீது எனக்காக அவன் நின்றான்” என்று கூறுகின்றார். அல்லேலூயா அப்பொழுது என்னுடைய இருதயத்தில் கிருபையைக் கொண்டவனாக, நல்ல கிரியைகளினாலே, ஆனால் அவருடைய இரக்கத்தினாலே நான் இரட்சிக்கப்பட்டேன் என்பதை அறிந்து, நான் தைரியமாக சிங்காசனத்தை நோக்கி நடந்தேன். என்னால் எதைச் செய்ய முடியும், என்னால் எதைச் சேர்ந்திருக்க முடியும், என்னால் என்ன கூறமுடியும் அல்ல; ஆனால் அவர் தம்முடைய கிருபையால் தான் என்னை இரட்சித்தார். இதை கிரகித்துக் கொண்ட கவிஞன், ''திகைப்பூட்டும் கிருபை, எவ்வளவு இனிமையான தொனி, என்னைப் போன்ற ஈனனை இரட்சித்தது, ஒருகாலத்தில் நான் காணாமற்போயிருந்தேன். இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டேன். குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்“ என்று கூச்சலிட்டதில் வியப்பொன்றுமில்லை. 32நான் எப்படி பரலோகம் செல்ல முடியும், நீங்கள் எப்படி பரலோகம் செல்ல முடியும்? நம்மால் முடியாது, நமக்கு ஒரு வழியும் இல்லை. ஆனால் ஒருவர் அதற்கான வழியை உண்டாக்கினார். அவரே வழி. அவரை நாம் எப்படி அடைவது? ஒரே ஆவியினாலே, அவருடைய ஆவியினாலே, நாம் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அதுஒரு சுழற்பாதையில் செல்வது போல் மேலே எழுப்பப்படும். நாம் இந்த கடைசி நாட்களின் விண்வெளி வீரர்களாக இந்த பூமியை விட்டு தேவனுடைய சமூகத்துக்கு செல்வோம். ஆமென். நிச்சயமாக, மனந்திரும்பின பாவிகள் கவலப்பட வேண்டியதில்லை. அவர்களுடைய இடத்தில் வேறொருவர் இருக்கிறார். ஓ, அவருடைய சமுகத்துக்கு இப்பொழுது வந்து, அவருடைய சமுகத்தில் இருப்பதாக நாம் அறிந்து கொண்ட பிறகு, அவர் பூமியில் இருந்தபோது செய்த கிரியைகளை இப்பொழுது செய்வதை நாம் கண்டோம். நீங்கள் காண்பது திராட்சை செடியா என்று எவ்விதம் அறிந்து கொள்வீர்கள்? அது கொடுக்கும் கனியின் மூலமாய். நீங்கள் சென்று கொண்டிருக்கும் சபையைக் குறித்து எவ்விதம் அறிந்து கொள்வீர்கள்? அது கொடுக்கும் கனியின் மூலமாய். இயேசு, ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்“ என்றார். 33நாம் சென்று ஸ்தாபனங்களை உண்டாக்க வேண்டுமென்று அவர் நம்மை நியமிக்கவில்லை. நாம் சென்று கோட்பாடுகளை உண்டாக்க வேண்டுமென்று அவர் நம்மை நியமிக்கவில்லை. அவைகளுக்கு விரோதமாக அவர் நம்மை எச்சரித்திருக்கிறார். இதனுடன் எதையாகிலும் கூட்டினால், அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்து போடப்படும். பாருங்கள்? எனவே நாம் அந்த வார்த்தையில் நிலைத்திருப்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய நியமிக்கப்படவில்லை. ஒரு மனிதன் தேவனால் அனுப்பப்பட்டிருந்தால், அவன் வார்த்தையில் நிலைத்திருப்பான், ஏனெனில் தேவன் தமது வார்தையை மாத்திரமே ஆதரிக்க முடியும். பாருங்கள். பாருங்கள், அவர் தமது வார்த்தையுடன் தங்கியிருக்க வேண்டும். அப்படியானால் நாம் அவருடைய சமுகத்தில் வரும்போது, ஒரு மனிதன் ஒருமுறை தேவனுடைய சமுகத்தில் வருவானானால், அவன் என்றென்றைக்கும் மாறிவிடுகிறான் - அவனிடத்தில் மாற வேண்டியவைகள் இருக்குமானால். சிலர் தேவனுடைய சமுகத்தில் நடந்து வந்து, அதைக் குறித்து கவனம் செலுத்தாமல் இருக்கலாம். அப்படியானால் அவன் நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்படவில்லை. ஆனால் அவன் தேவனால் முன் குறிக்கப்பட்டிருந்தால், அந்த முதல் அசைவு தாக்கினவுடனே அவன் அதை அறிந்து கொள்கிறான். அது பற்றியெரியத் தொடங்குகிறது. 34அந்த நாளில் சமாரியாவில் இருந்த அந்த சிறு வேசியை பாருங்கள். அவன் மனநிலை பிரகாரமாகவும், சரீரப் பிரகாரமாகவும் மோசமான நிலையில் இருந்தாள். அது நமக்குத் தெரியும். ஆனால் அந்த மேசியாவின் அடையாளம் செய்யப்பட்டதை அவள் கண்டவுடன், அவள், ''இதைச் செய்ய மேசியா வருகிறார் என்று அறிந்திருக்கிறேன். நீர் அவருடைய தீர்க்கதரிசியாயிருக்க வேண்டும்“ என்றாள். அவர், ''வருவார் என்று எழுதியிருக்கிற அந்த மேசியா நான் தான்“ என்றார். அவள் அதை அடையாளம் கண்டு கொண்டான். அவள் அதற்கு மேல் ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அவள் அந்த பொறுப்பைக் கொண்டவளாய் உடனே புறப்பட்டாள். அவள் அதை கண்டு கொண்டு தேவனுடைய சமுகத்தில் வந்திருப்பாளானால், அதைக் குறித்து வேறொருவரிடம் சொல்ல அவள் பொறுப்புள்ளவளாய் இருக்கிறாள் என்பதை அறிந்திருந்தாள். அல்லேலுயா! உண்மை. தேவனுடைய சமுகத்தில் வரும் எந்த மனிதனும், அந்த நிமிடம் முதற்கொண்டு அதை வேறொருவரிடம் சொல்ல தேவனுக்கு முன்பாக பொறுப்புள்ளவனாயிருக்கிறான். ஆபிரகாமைப் பாருங்கள், மோசேயைப் பாருங்கள், பேதுருவைப் பாருங்கள், பவுலைப் பாருங்கள். அவர்கள் தேவனுடைய சமுகத்தில் வந்த மாத்திரத்தில், தாங்கள் “பாவிகள்” என்பதை உணர்ந்து தங்கள் சாட்சியை தங்கள் ஜீவனைக் கொண்டு முத்தரித்தனர். அந்த சிறு சமாரியப் பெண்ணைப் பாருங்கள், அவளால் அதற்கு மேல் சும்மா இருக்க முடியவில்லை, அவள் ஊருக்குள்ளே போய் ஜனங்களை நோக்கி , ''நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார், அவரை வந்து பாருங்கள், அவர் மேசியாதானோ? என்றாள். அவர்களால் மறுக்க முடியவில்லை. ஏனெனில் அது வேதப் பூர்வமானது. நிச்சயமாக. ஆம். மோசே செய்தது போல, பேதுரு செய்தது போல, பவுல் செய்தது போல, நாமும் பொறுப்புடன் மற்றவர்களிடம் சொல்லும்போது, அவர்கள் அதை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். நீங்கள் இதைக் கண்டு, தேவனுடைய சமுகத்தில் வந்த பிறகு, செய்தி மற்றவர்களுக்கு சொல்வதற்கு நீங்கள் பொறுப்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது . அதை வேறொருவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். 35இங்கிருந்த ஒரு வயோதிப சகோதரியை எனக்கு ஞாபகம் வருகிறது. அவன் சகோ. கிரகாம் ஸ்நெல்லிங்கின் தாய். அவள் சபையில் உட்கார்ந்து கொண்டு, “நான் ஓடுகிறேன், ஒடுகிறேன், ஓடுகிறேன், இப்பொழுது தான் இந்த இடத்தை அடைந்தேன். என்னால் உட்கார்ந்திருக்க முடியவில்லை” என்று பாடுவது வழக்கம். அவள் அப்பொழுது தான் ஏதோ ஒன்றைக் கண்டு கொண்டாள். நான் லூயிவிலில்லிலுள்ள கறுப்பு மனிதரின் சபைக்கு சென்றிருந்தேன். அவர்கள் எல்லோரும் எழுந்து நின்று “நான் ராஜாவின் பெரும்பாதையில் ஓடிக் கொண்டேயிருந்து இப்பொழுது தான் அதை கண்டு கொண்டேன். நான் பெரும் பாதையில் ஓடினேன்” என்று பாடினார்கள். நீங்கள் கிறிஸ்துவைக் கண்டு கொள்ளும்போது அதில் ஏதோ ஒன்றுண்டு, அதன் பிறகு நீங்கள் அமைதியாய் இருக்க முடியாது. எஞ்சியுள்ள உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒரு மாறின நபராக இருப்பீர்கள். ஏனெனில் ஜீவனும் ஜீவனும் ஒன்று சேரும்போது அது பிரகாசமான ஒளியைத் தருகிறது. உண்மை. ஒரு மின்சார விளக்கு, மின்சாரக் கம்பியுடன் (wire) இணையும்போது, அது கெடாத விளக்காயிருந்தால் வெளிச்சத்தை தர வேண்டும். மின்சாரமும் விளக்கும் ஒன்று சேரும்போது, அது வெளிச்சத்தைப் பரப்புவதை தவிர வேறொன்றும் செய்வதில்லை. அது செய்தேயாக வேண்டும். அது போன்று, நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்ட ஒரு மனிதன் அல்லது ஸ்திரீ, தேவனுடைய மின்சாரம் அந்த விளக்குடன் இணைவதைக் காணும்போது, அது எல்லாவிடங்களிலும் வெளிச்சத்தைப் பரப்பும். நீங்கள் 'பத்து வாட்' விளக்காக இருக்கலாம், ஆனால் உங்களுக்குள்ள வெளிச்சத்தை நீங்கள் பரப்புவீர்கள். நீங்கள் 'ஐந்நூறு வாட்? விளக்காக இல்லாமல் போனால், பத்து வாட் வெளிச்சத்தைப் பரப்புங்கள். உங்கள் வெளிச்சத்தை தாருங்கள்! “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது'' ஆம், ஐயா! 36ஒரு மனிதன் தேவனுடன் தொடர்பு கொள்ளும் போது அவன் ''ஒன்றுமற்றவன்“ என்பதை அறிந்து கொள்கிறான். ஒருவன் ஒன்று மற்றவனாயிருக்கும் போது, அவன் எல்லாவிடங்களுக்கும் சென்று, தான் செய்ததை எல்லாம் எடுத்துக் கூறி, தான் எவ்வளவு பெரியவன் என்று எப்படி பெருமையடித்துக் கொள்ள முடியும்? அவன் தொடக்கத்தில்லேயே ஒன்றுமற்றவன். ஒரு நாள் டென்னஸியிலுள்ள மெம்பீஸில் - அது மெம்பீஸ் அல்ல என்று நினைக்கிறேன், அது அங்குள்ள இடங்களில் ஒன்று - நான் சகோ. டேவிஸுடன் எழுப்புதல் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தேன் - அது ஒருக்கால் மெம்பீஸாக இருக்கலாம். நாங்கள் அங்குள்ள ஒரு அரங்கத்துக்குச் (Coliseum) சென்றிருந்தோம். அது அரங்கம் அல்ல, அது ஒருவகையான ஒவியக் கூடம்; (art gallery). அங்கு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சிலைகளும் - ஹெர்கலிஸ் சிலை போன்றவை - சிறந்த ஒவியர் தீட்டின ஒவியங்களும் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் 150 பவுண்டு எடையுள்ள ஒரு மனிதனின் அமைப்பில் உள்ள இரசாயனப் பொருட்களை எழுதி வைத்திருந்தனர். அவனுடைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? எண்பத்து நான்கு சென்டுகள். அவ்வளவு தான் அவன். அவனிடமிருந்து எண்பத்து நான்கு சென்டுகள் மதிப்புள்ள இரசாயனப் பொருட்களையே நீங்கள் பெறமுடியும். ஒரு கோழிக் கூண்டை வெள்ளையடிக்கத் தேவையான போதிய சுண்ணாம்புப் பொருள் மாத்திரமே அவனிடம் உள்ளது - சிறிது கால்சியம், சிறிது பொட்டாஷ். அவை எல்லாம் சேர்த்து எண்பத்து நான்கு சென்டுகளுக்கு மாத்திரமே விற்கப்படும். நாமோ அந்த எண்பத்து நான்கு சென்டுகள் பெறுமானமுள்ள தன் பேரில் கவனம் செலுத்தி அதைப் பேணிப் பாதுகாக்கிறோம். 37அங்கு இரண்டு பையன்கள் நின்று கொண்டிருந்தனர். ஒருவன் மற்றவனைப் பார்த்து, “ஜிம், நம்முடைய விலைமதிப்பு அதிகம் இல்லை, இல்லையா?” என்றான். மற்றவன், ''ஆம், ஜான், விலை மதிப்பு அதிகம் இல்லை“ என்று விடையளித்தான். அப்பொழுது நான் அவர்களைப் பார்த்து, ''பையன்களே, ஒரு நிமிடம் பொறுங்கள். பத்தாயிரம் உலகங்கள் விலை மதிப்பு கொண்ட ஒரு ஆத்துமா உங்களுக்கு உண்டு. நீங்கள் மாத்திரம் அனுமதிப்பீர்களானால், அது தேவனுடைய வல்லமையினால் மீட்கப்படமுடியும்“ என்றேன். மனிதன் இவைகளைக் காணும்போது, அதை மற்றவர்களிடம் சொல்லுவதற்கு பொறுப்புள்ளவனாயிருக்கிறான். நான் ஒரு சிறுவனாயிருந்தபோது இதைக் கண்டேன். என் வாழ்நாள் முழுவதையும் அதிலே செலவழித்தேன். எனக்கு ஒரே உயிர் உள்ளது என்பதைக் குறித்து வருத்தம். எனக்கு பத்தாயிரம் இருந்தால் நலமாயிருக்கும். எனக்கு நித்தியம் இருக்குமானால், இதைக் குறித்து அப்பொழுதும் ஜனங்களிடம் சொல்ல நான் வாஞ்சை கொண்டிருப்பேன். எனவே இது நான் கண்டு கொண்ட மிகப் பெரிய காரியம். நீங்கள் எசேக்கியல் 33ம் அதிகாரத்தைப் படிப்பீர்களானால் அங்கு ஒரு காவற்காரன் கோபுரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவன் நகரத்தின் பாதுகாப்பு முழுவதற்கும் உத்தரவாதமுள்ளவனாயிருக்கிறான். ஆமென்! இந்த வேத பாகத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கும் போது, உங்கள் ஆவிக்குரிய மனசாட்சியை தட்டி எழுப்புங்கள். இந்த காவற்காரன் பயிற்சி பெற்றவனாயிருக்க வேண்டும். அவனுடைய பணியை அவன் நன்றாய் அறிந்திருக்க வேண்டும். தூரத்தில் எதிரிகள் வரும் போதே அவனால் அதைக் கண்டுபிடித்து விட முடியும். அவர்களுடைய அணிவகுப்பின் சத்தம், அவர்களுடைய நிறம், அவர்களுடைய வரிசைக் கிரமம் இவையனைத்தும் அவனுக்கு நன்றாகத் தெரியும். மனிதக் கண்கள் காணும் தூரம் வரைக்கும் அவனால் காணமுடியும். அவன் மற்றவர்களைக் காட்டிலும் உயரமான ஒரு இடத்தில் இருந்தான், எதிரியைக் கண்டுகொள்ள அவன் பயிற்சி பெற்றிருந்தான். தேவன் முழு நகரத்தின் இரத்தப் பழியையும் அவனுடைய கையில் வைத்திருந்தார். “ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது?” அல்லேலூயா! 38அவ்வாறே தேவனுடைய படைவீரர்களும் இன்றுள்ளனர். அவர்கள் வார்த்தையில் பயிற்சி பெற்றுள்ளனர். வேத வசனமில்லாத ஒன்று மெருகேற்றப்பட்டு கொண்டு வரப்படுமானால், அவர்கள் சபையோரை எச்சரிக்கின்றனர். வேதாகமத்தில் இல்லாத ஒன்று, தேவனைப் போல் இல்லாத ஒன்று - உதாரணமாக, சூப்இரவு உணவு, நடனங்கள் போதகர்களுக்கு பணம் அளிக்க நடத்தப்படும் நிகழ்ச்சிகள் போன்றவை - தவறானவை. சபைகளில் சூதாட்டங்கள், சீட்டு விளையாட்டு, இவையாவும் தவறு. சுவற்றின் மேல் இருக்கும் உண்மையான காவற்காரன், ஒருமுறை தேவனுடைய சமுகத்தில் இருந்தவன்... அவன் சுவற்றின் மேல் இல்லாமல் போனால், சுவற்றின் மேல் இருக்க வேண்டும். அந்த சுவர் மற்ற சபையோரைவிட உயரமாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முடியாத இடத்துக்கு தேவன் அவனை உயர்த்துவார். அவன் மந்தையின் மேல் கண்ணோக்கமாயிருக்கிறான், தேவன் அதை அவன் கையில் கேட்பார்! தேவனுடைய சமுகத்தில் நின்று, தேவன் தேவனென்றும், அவர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார் என்றும் அறிந்துள்ள எந்த தேவ மனிதனிடத்திலும் தேவன் தமது கடமையை நிறைவேற்றி அவருடைய வார்த்தையை நிறைவேறச் செய்வதைக் காணலாம். எத்தனை ஸ்தாபனங்கள் அதை கிழித்தெறிய முயன்றாலும், அவன் சத்துருவின் சேனைகளின் தரத்தை அறிந்திருக்கிறான். ஆமென். ஒரு உண்மையான காவற்காரன் சபையோருக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிந்திருக்கிறான். 39தேவன் உண்டென்றும், அவருடைய சமுகத்தில் நாம் இருந்திருக்கிறோம் என்றும் நாம் அறிக்கையிட்டு, நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், அவை அவருடைய நினைவின் புத்தகத்திலிருந்து போக்கப்படுகின்றன. தேவனைத் தவிர வேறுயாரும் அதைச் செய்ய முடியாது. நீங்கள் எனக்கு தீங்கிழைத்தால், நான் ஒருக்கால் உங்களை மன்னித்துவிடலாம், ஆனால் அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டேயிருப்பேன். அதுபோன்று, நான் உங்களுக்கு தீங்கிழைத்தால், நீங்கள் என்னை மன்னித்துவிடலாம். ஆனால் அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் தேவன் ஒருவர் மாத்திரமே அதை மன்னிக்கவும் மறக்கவும் முடியும். “அதை நான் நினையாமல் இருப்பேன்” என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்! ஆமென். அது எனக்கு நல்லுணர்வைத் தருகிறது. தேவன் ஒருவர் மாத்திரமே அதை இனி நினையாமல் இருக்க முடியும். அதை அவருடைய நினைவின் புத்தகத்திலிருந்து எடுத்துப் போடுவதாக அவர் கூறியுள்ளார். என்னால் முடியாது, உங்களால் முடியாது, ஏனெனில் நமக்கு இந்த சிறு முடிவுபெறக் கூடிய (finite) புலன்கள் மாத்திரமே உள்ளன. ஆனால் தேவனோ முடிவற்றவர். அதை செய்தது போலவே எண்ணாமல் அதை முற்றிலுமாக மறக்க அவரால் முடியும். ஆமென். 40ஒரு இளம் பெண் நகர்புறச் சபையிலிருந்து வந்திருந்தாள். அவளுடைய தகப்பனார் பழைய நாகரீகம் கொண்ட கூச்சலிடும் பிரசங்கி, இல்லை, சபை அங்கத்தினர். அவள் நகரத்துக்கு வந்து குடியேறி அங்கிருந்த பெண்களுடன் பழகி, அவர்களுடைய நாகரீகத்தைப் பின்பற்றி அவர்களைப் போல் நடந்து கொண்டாள். அவள் தன் பெற்றோரின் - இல்லை தகப்பனாரின் - நடத்தையைக் கண்டு அவமானம் கொண்டாள். அவளுடைய தாய் ஏற்கனவே மரித்துவிட்டாள். இந்த முதியவர் செய்யும் ஒரே காரியம் என்னவெனில், அவர் காலையில் எழுந்து, காலை உணவை உண்டு விட்டு, வேதாகமத்தை எடுத்து அதை வாசித்து நாள் முழுவதும் அழுது ஜெபித்து சத்தமிட்டுக் கொண்டு அறையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருப்பதே. மகள் இதைக் குறித்து தர்ம சங்கடம் அடைந்தாள். எனவே வேதாகமம் கையில் கிடைத்தால் இரவு முழுவதும் அவர் வேதாகமத்தை படித்துக் கொண்டிருந்து, படுக்கையை விட்டு எழுந்து, ''தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! ஓ, தேவனுக்கு மகிமை!“, என்று பாதி இரவு சத்தமிட்டுக் கொண்டிருப்பார். 41ஒருநாள் அந்த பெண் தன் சபை அங்கத்தினருக்கு விருந்து கொடுக்க எண்ணினான் - அவர்கள் வழக்கமாக செய்வது போல் ஒரு சிறு தேநீர் விருந்து. தன் தகப்பனை என்ன செய்யவேண்டுமென்று அவளுக்குத் தெரியவில்லை. எப்படியானாலும் அவர் அவளுடைய தகப்பன். எனவே அவரை மாடியிலுள்ள ஒரு சிறு அறையில் வைத்து விட தீர்மானம் கொண்டாள், அவள், “அப்பா, பெண்கள் உள்ள இடத்தில் நீங்கள் இருக்க பிரியப்பட மாட்டீர்கள், இல்லையா?” என்று கேட்டான். அவர், ''இல்லை, எனக்குப் பிரியமில்லை“ என்றார். அவள், ''இன்று சபையைச் சேர்ந்த பெண்கள் இங்கு வரப்போகிறார்கள். நாங்கள் ஒரு சிறு கூட்டம், ஒரு சிறு ஜெபக் கூட்டம், வைத்திருக்கிறோம். ஆகையினால் அப்பா, நீங்கள் மாடியிலுள்ள அறைக்கு சென்றுவிடுங்கள்“ என்றாள். அவர், ''சரி, நான் போகிறேன்“ என்றார். அவள், ''இந்த அருமையான புத்தகத்தைப் படியுங்கள்,'' என்று சொல்லி ஒரு பூகோளப் புத்தகத்தை கையில் கொடுத்தாள். அவர் அமைதியாயிருக்க வேண்டுமெனக் கருதி அவருடைய வேதாகமத்தைப் அங்கிருந்து எடுத்துவிட்டாள். அவர் வேதாகமத்தை படித்தால், அதிக சத்தமிடுவார் என்று அவளுக்குத் தெரியும். எனவே விருந்து நடந்து கொண்டிருக்கும் இடத்தை விட்டு அவர் மேலே சென்றார். அவள் பூகோளப் புத்தகத்தைக் கொடுத்து,“இது நல்ல புத்தகம். அப்பா, இதை நீங்கள் படிக்க வேண்டும். உலகத்தைக் குறித்த உண்மைகளை இது கூறுகிறது” என்றாள். அவர்,“அதை படிக்க எனக்கு ஆவல்” என்றார். எனவே அவள், “நீங்கள் இப்பொழுது மேலே போய், இந்த பெண்கள் இங்கிருந்து போகும் வரைக்கும் அமைதியாயிருங்கள், அதன் பிறகு நான்.... நீங்கள் கீழே இறங்கிவந்து என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்றாள். அவர் ஒப்புக்கொண்டு, மாடிக்குச் சென்று அங்கே உட்கார்ந்தார். 42அவர்கள் எல்லோரும் தேநீர் விருந்து அருந்தி இன்னார் இன்னாரைக் குறித்துப் பேசி - அது எப்படி நடக்கிறதென்று உங்களுக்குத் தெரியும் - நல்ல தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று மேல் மாடியில் ஏதோ ஒன்று அவிழ்த்துவிடப்பட்டது போல் கூச்சலிடுதலும் குதிக்கும் சப்தமும் கேட்டது. அந்த அதிர்ச்சியில் கூரையிலிருந்து சுண்ணாம்பு கீழே விழுந்தது. அந்த முதியவர் மேலறையில் வேகமாக இங்குமங்கும் ஓடி, மேலும்கீழும் குதித்து, “தேவனுக்கு மகிமை! தேவனுக்கு மகிமை!” என்று உரக்க சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இந்த பெண்களுக்கு மாடியில் என்ன நடந்ததென்றும், யார் அங்கே இருந்ததென்றும் தெரியவில்லை. அவர் படிக்கட்டுகளில் வேகமாக இறங்கி வந்தார். அவள், “அப்பா, உங்களுக்குப் படிக்க நான் பூகோளப் புத்தகத்தை அல்லவா கொடுத்தேன்” என்று கேட்டாள். அவர், “ஆம், எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். இந்த பூகோளப் புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருந்த போது, கடலில் சில இடங்களில் கடையாந்திரமே இல்லை என்று எழுதப்பட்டிருந்ததை கண்டேன். வேதாகமத்தில் நேற்று நான், அவர் என் பாவங்களை ”மறதியின் கடலில் போட்டுவிட்டதாகப் படித்தேன். தேவனுக்கு மகிமை! அவை ஆழத்தில் இன்னும் போய்க் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு ஒரு கடையாந்திரமே இல்லை, அவை போய்க் கொண்டேயிருக்கின்றன“ என்றார். அதுஉண்மை. அதன் காரணமாக அவர் ஆர்ப்பரித்தார். நல்லது, அது உண்மை . 43தேவன் நமது பாவங்களை மறதியின் கடலில் போட்டு விட்டு அவைகளைப் போக்கி விட்டார். அவை முதற்கண் நடக்காதது போலவே அவர் எண்ணுகிறார். ஓ, என்னே! அப்பொழுது நாம் தேவனுடைய கிருபையிலும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய், அவர் பரிசுத்தராயிருப்பது போல, நாமும் பரிசுத்தரும் தூய்மையுள்ளவருமாயிருக்கிறோம். ஏனெனில் அங்கு நான் செல்லும் போது, அவர் என்னைக் காண்பதில்லை, அவருடைய சொந்த குமாரனையே காண்கிறார். அந்த ஒரு வழியில் மாத்திரமே அவர் காணமுடியும். அவர் என்னைக் காண முடியாது, ஏனெனில் நான் அவருடைய குமாரனுக்குள் இருக்கிறேன். அவர் தமது குமாரனை மாத்திரமே காண்கிறார். அது அற்புதமல்லவா? நாம் பாவங்களைக் குறித்து இனி நினைக்க வேண்டிய அவசியமில்லை. அவை போய்விட்டன, அவை இரத்தத்தின் கீழ் உள்ளன. ஆம், ஐயா. அதைக் குறித்து இனி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவை அனைத்தும் வெளியேறி, தேவனுடைய நினைவிலிருந்து அகன்று விட்டன. அவர் அதை இனி ஒருபோதும் நினையாமல் இருக்கிறார். 44அந்த மகத்தான தீர்க்கதரிசி, ஏசாயா, தன் பாவங்களை அறிக்கைவிட்டு, ''ஐயோ! அதமானேன். நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்“, என்றான். ஒரு தீர்க்கதரிசி!” “நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், என் சபையோரும் அசுத்தமானவர்கள். ”பாருங்கள்?“ நான் பிரசங்கம் செய்யும் ஜனங்கள் அசுத்தமானவர்கள்; நானும் அசுத்தமானவன். ஐயோ! அதமானேன். ஆனால் இதோ ஒரு கூட்டம் தேவதூதர் தேவனுடைய மகிமையைவிட்டு, மேகங்களைத் தள்ளிக் கொண்டு இறங்கி வருகின்றனர். நான் மேலே பார்த்தபோது அவருடைய வஸ்திரத் தொங்கலால் முழு பரலோகமும் நிறைந்திருந்தது. பாவம் என்னவென்றே அறியாத இந்த தேவ தூதர்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். பாவம் என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது, அவர்கள் தேவனுடைய சமுகத்தில் உள்ளனர், அவர்களுடைய முகங்களின்மேல் இரண்டு செட்டைகளும், கால்களின் மேல் இரண்டு செட்டைகளும் உள்ளன. அவர்கள் இரண்டு செட்டைகளால் பறந்து வந்து இரவும் பகலும் ஓயாமல், ''தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர். “வ்யூ! அது உங்களை ஒருவிதமான பரிசுத்த மற்றவர் என்று உணரச் செய்கிறது, இல்லையா? அவன் என்ன செய்தான்? அவன், ''ஐயோ! அதமானேன்” என்று சொன்னான். 45அவன் தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு “ஐயோ அதமானேன்'' என்று கூறின போது ஒரு தேவதூதன் பலிபீடத்துக்கு சென்று குறட்டைக் கையிலெடுத்து, அந்த குறட்டால் பரிசுத்த ஆவிக்கும் அக்கினிக்கும் அடையாளமாயுள்ள ஒரு நெருப்புத் தழலை எடுத்து அதினால் தீர்க்கதரியின் உதடுகளைத் தொட்டு, ”உன்னை நான் சுத்திகரித்துவிட்டேன்“ என்றான். அந்த செட்டைகள் இப்படி அடித்துக் கொண்டு சென்று, காலத்தின் திரையை நீக்கினபோது, ”யார் நமது காரியமாய்ப் போவான்?“ என்று தேவன் உரைப்பதைக் கேட்டான். பாவத்தைப் போக்க ஒரு வழியுண்டு என்பதை அவன் கண்டு கொண்ட பின்பு, அவருடைய காரியமாக யாராகிலும் போக வேண்டுமென்று தேவன் விரும்பினார். அப்பொழுது அவன், ''இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்'' என்றான். அவன் தேவனுடைய சமுகத்தில் இருந்து, தன் பாவங்களை அறிக்கையிட்டு அவை நிவிர்த்தியான பின்பு ஊழியத்துக்கு ஆயத்தமானான். ஆமென். கவிஞன் அதை கிரகித்துக் கொண்டு, “லட்சக்கணக்கானோர் பாவத்திலும் அவமானத்திலும் மாண்டு கொண்டிருக்கின்றனர், அவர்களுடைய வருத்தமான அழுகுரலுக்கு செவிகொடு. சகோதரனே, விரைந்து சென்று அவர்களைக் காப்பாற்று; ஆண்டவரே, இதோ அடியேன் இருக்கிறேன்“ என்று வேகமாக பதில் கூறு“ என்று பாடினான். 46நான் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் இன்னும் உலகின் பல்வேறு பாகங்களிலும், உள்ள லட்சக்கணக்கான அஞ்ஞானிகள் இரக்கத்திற்காக அழுது புலம்புவதை எண்ணிப் பார்க்கும்போது, யார் போவார்? அவர்களுக்கு கைப்பிரதியைக் கொடுப்பதல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவை அவர்களிடம் கொண்டு வருதல். மோசேயைப் போல் அவருடைய சமுகத்தில் இருந்த யாராகிலும் அங்கு சென்று அவர்களுக்கு உண்மையான விடுதலையை காண்பிக்க வேண்டும். அவர்களைச் சபையில் சேர வைப்பதோ, அல்லது கைகளைக் குலுக்கி கோட்பாடுகளை அளிப்பதோ அல்ல, அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு உண்மையான விடுதலையைக் கொண்டு வருதல்; சில நல்ல தேவ பக்தியுள்ள மனிதர். ஆம், ஏசாயா தன் பாவங்களை அறிக்கையிட்டு சுத்திகரிக்கப்பட்டான். 47யாக்கோபு இரவு முழுவதும் போராடி தன் பாவங்களை அறிக்கையிட்ட பிறகு அவன் இருந்த இடம் உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? அது பெனியேல் என்றழைக்கப்பட்டது. பெ- னி- யே-ல், பெனியேல். பெனியேல் என்னும் சொல் எபிரெய மொழியில் “சர்வ வல்லமையுள்ள தேவனின் முகம்” என்று பொருள்படும். அந்த பயந்த சுபாவமுள்ள யாக்கோபு... அவனுடைய பெயர் யாக்கோபு, அதன் பொருள் “எத்தன்,” அதாவது வஞ்சகன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் தேவனை விட்டு ஓடிக் கொண்டிருந்தான், ஆனால் ஒருமுறை அவன் பெனியேலில் தேவனுடைய சமுகத்தில் வந்து தேவனை முகமுகமாய்க் கண்டபோது, அவன் தேவனை இறுகப்பற்றிக் கொண்டு அவரைப் போக விட மறுத்தான். தேவனே, எங்களுக்கு அதிக யாக்கோபுகள் தேவை. அவன் தேவனுடைய சமுகத்தில் தேவனுடைய முகத்தைப் பற்றிக்கொண்டு, பொழுது விடியும்வரைக்கும் தங்கியிருந்தான். தேவன் அவனிடம், ''நான் போகட்டும், பொழுது விடிகிறது“ என்றார். அவன் தேவனுடைய சமுகத்தில் பொழுது விடியும் மட்டும் தங்கியிருந்தான். அவன் நீதிமானாக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டு அவ்விடம் விட்டுச் சென்றான். 48ஓ, அவன் போராடினான் என்பது எவ்வளவு பெரிய காரியம்! அவன் தேவனுடைய அடையாளங்களைக் கண்டிருந்தான். அவன் தேவனை சொப்பனத்தில் கண்டிருந்தான். ஆனால் இந்த ஒரு முறை அவன் தேவனுடைய சமுகத்தில் வந்து தேவனை முகமுகமாய்ச் சந்தித்தான். நண்பர்களே, அதை சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய சமுகத்தில் ஒரு மனிதன் மாறுகிறான். யாக்கோபு மாறினான். அதன் பிறகு அவன் தேவனுடன் நடக்க முடிந்தது. ஆம், அவன் அங்கு சென்றபோது இருந்ததைக் காட்டிலும் வித்தியாசமான மனிதனாகிவிட்டான். போராட்டம் அப்பொழுது முடிந்து விட்டது. ஆம். ஐயா. அவன் ஒரு பலி பீடத்தைக் கட்டத்துவங்கினான். ஆம், ஐயா. அவன் ஒரு பலி பீடத்தைக் கட்டத்துவங்கினான். அவன் பலிபீடங்கள் கட்டுவதில் பழக்கப்பட்டவன் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் தேவனுடைய சமுகத்தில் வரும்போது, எங்காவது ஒரு பலிபீடத்தைக் கட்ட விரும்புவீர்கள். நீங்கள் ஜெபம் பண்ணக் கூடிய ஒரு இடத்தை எங்காவது கண்டுபிடிக்க விரும்புவீர்கள். அவன் ஒரு பலிபீடத்தைப் கட்டினான். அவன் சுத்திகரிக்கப்பட்டான், தேவன் முடிவில் வென்றார். 49யாக்கோபு என்னும் பெயர், யாக்கோபு, ''எத்தன்'' என்பதிலிருந்து இஸ்ரவேல், “தேவனுடன் அதிகாரம் கொண்டுள்ள பிரபு” என்பதாக மாற்றப்பட்டது. அதுதான் யாக்கோபுக்கு சம்பவித்தது. யாக்கோபு, எத்தன், வஞ்சகன், அநீதியுள்ளவன், அசுத்தமுள்ளவன், ஏமாற்றுபவன், தன் சகோதரனை ஏமாற்றினான், சேஷ்டபுத்திர பாகத்தை தன் சகோதரனிடமிருந்து திருடிக் கொண்டான், அதற்காக ஒரு மோசமான முறையைக் கையாண்டான், அப்படிப்பட்ட ஒரு ஏமாற்றுக்காரன். அவன் தன் மாமனாரை ஏமாற்றினான். அவன் புன்னை மரக்கொம்புகளைப் போட்டு புள்ளியுள்ள கன்றுக்குட்டிகள் ஈனும்படி செய்தான். கர்ப்பமுள்ள பசுக்கள் அங்கு வந்து அதை பார்த்த போது... ஆடுகள் புள்ளியுள்ள அந்த கொம்புக்களைக் கண்டு பொலிந்த போது, புள்ளியுள்ள ஆட்டுக் குட்டிகளைப் போட்டன. ஏமாற்றுபவன், தன் சொந்த மாமனாரை ஏமாற்றினான், தன் தாயை ஏமாற்றினான், தன் தகப்பனை ஏமாற்றினான், தன் சகோதரனை ஏமாற்றினான். ஆனால் ஒருமுறை அவன்.... அவன் பயந்த சுபாவமுள்ளவன். அவன் எல்லாவிடங்களிலும் ஒடினான், எப்பொழுதும் தேவனை விட்டு ஓடிக்கொண்டே இருந்தான், தன் சகோதரனை விட்டு ஓடிக்கொண்டே இருந்தான். ஆனால் அவன் தேவனுடைய சமூகத்தில் வந்தபோது, அவன் ஒரு பாவி என்பதை உணர்ந்தான். அவன் என்ன செய்தான்? அவன் என்ன செய்தான்? அவன் தனக்குக் கிடைத்த தருணத்தைக் கண்டான். அவன் முன்பு நினைத்தும் கூட பார்த்திராத ஒருவரை சந்தித்தான். அவனுடைய பாவங்கள் அனைத்தும் போகும் வரைக்கும், அவன் அங்கு தங்கியிருந்தான். ஓ, என்னே! தேவன் அவனைத் தமது சொந்த சமுகத்தில் கொண்டு வந்தார். 50தேவன் மனிதனை தமது சமுகத்தில் கொண்டு வருவதற்கு ஒருவழியைக் கையாளுகிறார். அப்பொழுது அவர்கள் தங்கள் தீர்மானத்தைச் செய்கின்றனர். சிலர் அவரை விட்டு ஓடிப் போகின்றனர், சிலர்அவரிடம் ஓடி வருகின்றனர். அவர்கள் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டிருந்தால், அதை விசுவாசித்து, அதைப் பற்றிக் கொள்கின்றனர். அவர்கள் முன்குறிக்கப்படாவிட்டால், அவர்கள் விலகிச் சென்று, “அதில் ஒன்றுமில்லை” என்கின்றனர். பாருங்கள்? அப்படிப்பட்ட மனிதன் தான் இழக்கப்படுகின்றான். தன் பாவத்தை அறிக்கையிடுகிற மனிதன் மன்னிக்கப்படுவான். உன் பாவத்தை நீ மறைத்தால் வாழ்வடையமாட்டாய். எனவே யாக்கோபு; அடுத்த நாள் அவன் தன் சகோதரன் ஏசாவை சந்தித்தான். அப்பொழுது அவனுக்கு அவனிடமிருந்து உதவி தேவைப்படவில்லை. அவனுடைய சேனைகள் அவனுக்குத் தேவைப்படவில்லை. அவன் பலிபீடங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தான். அதன் பிறகு அவன் ஏசாவுக்கு பயப்படவில்லை. 51சங்கீதம்: 168-ல், தாவீது, ''கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்“ என்கிறான். அப்படி செய்வது மிகவும் நல்லது. சங்கீதம்: 16:8 ”கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்“. எனவே, அவன் அதைக் குறித்து குழப்பமடைய வேண்டியதில்லை. அவன் அவருடைய சமுகத்தைக் குறித்து உணர்வுள்ளவனாக இருக்க விரும்பினான். எனவே தாவீது, ”கர்த்தரை எப்பொழுதும் என் முகத்துக்கு முன்பாக வைத்திருக்கிறேன். தாவீதாகிய நான் எப்பொழுதும் தேவனுடைய சமுகத்தைக் குறித்து உணர்வுள்ளவனாக இருக்கும் பொருட்டு, கர்த்தரை என் முகத்துக்கு முன்பாக வைத்திருக்கிறேன்“ என்றான். அது நம்மெல்லாருக்கும் இன்றிரவு ஒரு நல்ல பாடமாக இருக்கும் அல்லவா? அவருடைய சமுகத்தைக் குறித்து உணர்வுள்ளவர்களாக இருக்கும் பொருட்டு, கர்த்தரை உங்கள் முகங்களுக்கு முன்பாக வைத்திருங்கள். அவரை முதலில் வையுங்கள். ஏன்? உங்களுக்கு முன்பாக அவரை முதலில் வையுங்கள். ஏன்? நீங்கள் தேவனுடைய சமுகத்தில் எப்பொழுதும் இருக்கிறீர்கள் என்பதை உணரும்போது பாவம் செய்யமாட்டீர்கள். தேவன் அருகில் இருக்கிறார் என்பதை நீங்கள் உணரும்போது, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாயிருப்பீர்கள். 52தேவன் போய்விட்டார் என்று ஒரு மனிதன் நினைக்கும் போது, அவன் சபிப்பான், பெண்களை இச்சிப்பான், எல்லாம் செய்வான்... திருடுவான், ஏமாற்றுவான், பொய் சொல்வான். தேவன் அவனைக் காண்பதில்லை என்று அவன் நினைப்பதனால், அவன் எதையும் செய்வான். அவனை தேவனுடைய சமுகத்தில் கொண்டு வாருங்கள், அவன் அதை உடனே நிறுத்திவிடுவான். பாருங்கள்? தாவீது, ''கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்“ என்றான். அது மிகவும் நல்ல காரியம். அவனைத் தேவன் தமது இருதயத்துக்கு ஏற்றவன் என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. அவர் அருகில் இல்லை என்று ஒரு மனிதன் நினைக்கும்போது, அவன் எதையும் செய்வான். ஆனால் அவர் அருகில் இருக்கிறார் என்று அவன் உணரும்போது; ஒரு பாவியை நீங்கள் கவனித்ததுண்டா? தேவ பக்தியுள்ள ஒரு மனிதன் அவனிடம் சென்றால், அவன் சபித்தலை நிறுத்திவிடுவான் - அவனுக்கு மரியாதை ஏதாவது இருக்குமானால், பாருங்கள்? அவன் வழக்கமாக கூறும் கேவலமான ஹாஸ்யத் துணுக்குகளை கூறமாட்டான். பாருங்கள்? பாருங்கள், அவன் அதை விட்டுவிடுவான். ஏனெனில் அவன் தேவனுடைய சமுகத்தில் இருப்பதை அறிந்திருக்கிறான். தேவன் தமது ஜனங்களின் சரீரங்களாகிய கூட்டங்களில் வாசம் செய்கிறார். பாருங்கள்? 53தாவீது இதைச் செய்த பிறகு,“என் இருதயம் பூரித்தது” என்கிறான். அதை நீங்கள் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சங்கீதம்: 16, “என் இருதயம் பூரித்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்” ஏன்? ''என் இருதயம் பூரித்தது, ஏனெனில் தேவனை எல்லா நேரங்களிலும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்“. என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; நான் மரித்தால், மறுபடியும் உயிரோடெழுந்திருப்பேன். ஏனெனில் அவர் தமது பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டார், அவனுடைய ஆத்துமாவை பாதாளத்தில்விடார்”. பாருங்கள்? தாவீது தேவனைத் தனக்கு முன்பாக வைத்து, அவன் தேவனுடைய சமுகத்தில் எப்பொழுதும் இருக்கிறான் என்ற உணர்வுள்ளவனாயிருந்தான். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்”. 54சபையே, கவனி. நான் உங்களை நேசிக்கிறேன். நான் கூறுவதற்கு நீங்கள் செவிகொடுக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சகோதரன் மக்கல்லி வழக்கமாக கூறுவது போல, நானும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எப்பொழுதுமே தேவனை உங்களுக்கு முன்பாக வைத்திருங்கள். அவருடைய சமுகத்தில் நீங்கள் எதைச் செய்ய விரும்பமாட்டீர்களோ, அதை செய்யாதீர்கள். ஏனெனில் அவர் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். பாருங்கள்? கர்த்தர் தமக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்குகிறார். அவர் ஒருபோதும்... அவர் உங்கள் அருகில் இருக்கிறார். நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் அவருக்குத் தெரியும், அதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பொய்யைச் சொல்லத் தொடங்கினால், அதை செய்யாதீர்கள். தேவன் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஏமாற்றம் செய்யத் தொடங்கினால், அதை செய்யாதீர்கள். தேவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய நாமத்தை நீங்கள் வீணிலே வழங்கத் தொடங்கினால், அதை செய்யாதீர்கள். தேவன் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு சிகரெட்டை புகைக்கத் தொடங்கினால், அவர் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். பாருங்கள்? அவருடைய... %ஆத்துமாவின் உண்மையான வாசஸ்தலத்துக்கு செல்லும் பாதை முழுவதிலும், %ஒரு கண் உங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறது. %நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியையும் %இந்தமகத்தான கண் விழித்திருந்து கவனித்துக் கொண்டிருக்கிறது“ என்னும் பாடலை நாங்கள் முன்பு பாடுவது வழக்கம். ஞாபகம் கொள்ளுங்கள், தாவீதைப் போல், கர்த்தரை எப்பொழுதும் உங்கள் முகத்துக்கு முன்பாக வைத்திருங்கள். அப்பொழுது உங்கள் இருதயம் பூரித்து உங்கள் மாம்சம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும், ஏனெனில் அவர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். ஆம், ஐயா. தாவீது, தான் உயிரோடெழும்புவான் என்பதை அறிந்திருந்தான், ஏனெனில் தேவன் அதை வாக்களித்திருந்தார். சரி. அவருடைய சமுகத்தில் நாம் வரும்போது மாறிப்போகிறோம். நாம் முன்பிருந்தது போல் இருப்பதில்லை. காலங்கள் தோறும் பல்வேறு துறைகளில் இருந்த மனிதரைப் பாருங்கள். ஆபிரகாமைப் பாருங்கள். நீங்கள், ''மாற்றப்பட்ட வாழ்க்கை போதகர்களுக்கு மாத்திரமே“ எனலாம். ஓ, இல்லை. மாற்றப்பட்ட வாழ்க்கை எல்லோருக்குமே, பாருங்கள். 55ஆபிரகாம் ஒரு பண்ணையாளன். ஆனால் தேவனுடைய சத்தம் அவனுடன் பேசுவதைக் கேட்டு, அந்த தரிசனத்தைக் கண்டபோது, அவன் அந்நேரம் முதற்கொண்டு மாறிப்போன ஒரு மனிதனாகி விட்டான். அவன் தன்னுடைய இனத்தாரிடமிருந்தும் தன் கூட்டாளிகள் அனைவரிடமிருந்தும் பிரிந்து வந்து, ஒரு அந்நிய தேசத்தில் பரதேசியும் சஞ்சாரியுமாக தன் வாழ்நாள் முழுவதும் நடந்து, கூடாரங்களில் குடியிருந்தான். ஏனெனில் தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்ததாக அவன் தெளிவாய் அறிக்கையிட்டான். அதைத்தான் எபிரேயர்: 11 நமக்கு கூறுகிறது, தேவன் ஒருவர் இருக்கிறார் என்றும் எங்கோ ஒரு நகரம் உள்ளதென்றும் அதைக் கட்டி உண்டாக்கினவர் தேவன் என்றும் அறிந்திருந்தான். அவன் மாறின ஒரு மனிதன், அவன் ஒரு சாதாரண பண்னையாளனைத் தவிர வேறொன்றுமல்ல. அவன் தரிசனம் கண்டு தேவனுடைய சமுகத்தில் வந்தான். அப்பொழுது முதல் அவன் ஒரு மாறின மனிதன். 56மோசே ஆடுகளை மேய்ப்பவன். ஆனால்அவன் தேவனுடைய சமுகத்தில் வந்த போது, மாறின ஒரு மனிதனானான். அவன் ஒரு பயங்காளி, அவன் பார்வோனிடமிருந்து ஓடினான், முழு சேனையுமே அவனைப் பின்தொடர்ந்தது. ஆனால் ஒரு கோலைப் பிடித்துக் கொண்டு அவன் திரும்பிச் சென்று முழு தேசத்தையுமே கைப்பற்றினான். பாருங்கள்? ஏன்? அவன் தேவனுடைய சமுகத்தில் வந்தான், அவன் மாறின மனிதனானான் - ஒரு மேய்ப்பன். பேதுரு, மீன் பிடிப்பவன், அவனுக்கு மீன் பிடிப்பதை குறித்து... இல்லை, தேவனைக் குறித்து ஒன்றுமே தெரியாது. அவனுக்குத் தெரிந்திருந்த ஒன்றே ஒன்று மீன் பிடிப்பது எப்படியென்று. ஆனால் அவன் தேவனுடைய சமுகத்தில் வந்து, அந்த மகத்தான சிருஷ்டி கர்த்தர் அவனிடம் வலையைப்போட்டு மீன்களை இழுக்கக் கூறி, அந்த மீன்களை சிருஷ்டித்த போது; அங்கு மீன்கள் எதுவும் இருக்கவில்லை, அவன் வலையை சும்மா இழுத்தான். அவன், “ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின் படியே வலையைப் போடுகிறேன். நீர் தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் வலையை... நான் வலையைப் போடுகிறேன் என்றால், நீர் எனக்குக் கட்டளையிட்ட உம்முடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து அவ்விதம் செய்கிறேன். நீரும் உம்முடைய வார்த்தையும் ஒன்றே. நான் வலையைப் போடுகிறேன்” என்றான். அவன் வலையை இழுத்த போது அதில் திரளான மீன்கள் இருக்கக்கண்டு, “ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னை விட்டுப் போக வேண்டும்'' என்றான். பாருங்கள். மீன்பிடிப்பவன். பேதுரு கிறிஸ்துவைக் சந்தித்த பிறகு, அவன் முன்பு போல் இருக்கவில்லை. அவன், அதற்குபிறகு, தேவனுக்கு மிகவும் உண்மையாய் இருந்ததினால், அவனிடம் ராஜ்யத்தின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டன. ஆம். ஐயா. 57பவுல், பரிசேயன் என்று தன்னை அழைத்துக் கொண்டவன், அக்காலத்தில் உலகில் இருந்த எல்லா மார்க்கங்களையும் படித்து, தேர்ச்சி பெற்றவன், தேசத்திலே மிகச் சிறந்து விளங்கின அறிவாளிகளில் ஒருவன். ஒரு நாள் அவன் அந்த அக்கினி ஸ்தம்பத்துக்கு - அவன் அறியாமையின் காரணமாக துன்புறுத்தின அந்த தேவனுக்கு - முன்பாக வந்தபோது; அவன் ஒரு பரிசேயன். தேவன் ஒரு மனிதன் என்று அவன் நம்பவில்லை. தேவன் அக்கினி ஸ்தம்பமாயிருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். அந்த அக்கினி ஸ்தம்பம் அவருடைய ஜனங்களை எகிப்தை விட்டு வெளியே நடத்திச் சென்றது, அது அவர்களுடன் கூட வழிநெடுக இருந்தது. அவன் அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டபோது முகங்குப்புற விழுந்தான். அப்பொழுது, “சவுலே என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்றுரைக்கும் ஒரு சத்தத்தைக் கேட்டான். அவன், ''ஆண்டவரே, நீர் யார்?“ என்றான். அவர், ''நான் இயேசு“ என்றார். ''நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்ட மனிதன் அவனே. அவன் தேவனுடைய சமுகத்தில் இருந்தான். அவன் தேவனுடைய சமுகத்தில் இருந்த அன்று முதற்கொண்டு, மாறின மனிதனானான். அது மனிதனை மாற்றுகிறது. 58சார்லஸ் ஜி. ஃபின்னி என்பவர் ஒரு வழக்கறிஞர். பிலதெல்பியாவைச் சேர்ந்த ஒரு சிறந்த வழக்கறிஞர். ஆனால் அவர் தேவனுடைய சமூகத்தில் வந்தபோது, அவர் சட்டப் படிப்புகளை எல்லாம் துறந்துவிட்டு, இந்த தேசம் இதுவரை பெற்றுள்ள பிரசங்கிமார்கள் அனைவரிலும் மிகவும் வல்லமையுள்ள பிரசங்கியாக மாறினார்.... அவர் ஒரு பிரசங்கி. ஏனெனில் அவர் ஒரு நாள் தேவனுடைய பிரசன்னத்திற்கு வந்தார். அவர் இந்த ஊழியத்தைப் படித்து... என்று அவர் நினைத்தார். நீங்கள் அவருடைய புத்தகத்தை அறிந்துள்ளீர்களா? அவருடைய சுயசரிதம் என்னிடமுள்ளது. அவர் ஜெபிக்கச் சென்றார், அவர் தான் ஒரு பிரசங்கியார் என்று நினைத்திருந்தார். அவர் பிரசங்கிக்க விரும்பினார். அவரிடம் அந்த வாஞ்சையிருந்தது. அவர் பிரசங்கம் செய்ய முயற்சிக்க அவரிடம் சில பிரசங்கங்கள் இருந்தன. அவர் தன் அலுவலகத்தைவிட்டு ஜெபிக்கும்படி ஓரிடம் சென்றார், அவர் காட்டிற்குள் சென்றார். அவர் ஒவ்வொரு பிற்பகலும் ஒரு உடைந்து போன மரத்தின் பின்முழங்கால்படியிடுவார்; மத வைராக்கியம்; ஆனால் அவர் அதில் விசுவாசம்... அங்கு சபையிலிருந்து இரண்டு ஸ்திரீகள், “நீர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று நாங்கள் உமக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர். அவரோ, “நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன். நான் ஒரு பிரசங்கி,” என்றார். அவர்கள், ''திரு. ஃபின்னி, நீர் பெரிய மனிதர், வார்த்தையை நன்றாக அறிந்திருக்கிறீர். ஆனால் உமக்குப் பரிசுத்த ஆவி தேவை“ என்றனர். அந்த இனிய ஸ்திரீகள். எனவே அவர் இப்படியாக சென்று கொண்டேயிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் தமது முதலாளியையும் தன்னுடன் வேலை செய்கின்றவர்களையும் விட்டுப்பிரிந்து சட்ட அலுவலகத்துக்குப் பின்னால் சென்று ஜெபித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர், அங்கு ஜெபம் செய்து கொண்டிருந்த போது, ஒரு 'பிரஷ்' (brush) உடையும் சத்தத்தைக் கேட்டார். அவருடைய முதலாளி தான் அவரைத் தேடிக் கொண்டு வருகிறதாக அவர் நினைத்துக் கொண்டு வேகமாக எழுந்து, “தேவனாகிய கர்த்தாவே, உம்மை நான் விசுவாசிக்கிறேன்” என்றார். அவர் ஜெபம் செய்வதை நிறுத்திக் கொண்டு, ஜெப நிலையிலிருந்து எழுவதற்கு முன்பு தூசைத் தட்டிவிட்டு... அவர் எழுந்து “உம், உம்'' என்று சொல்லிவிட்டு, அந்த பிரஷ்ஷை உடைத்தது என்னவென்று அறிய சுற்றும் முற்றும் பார்த்தார். அப்பொழுது, அவர் தேவனுடைய சமுகத்தில் வந்தார். அந்த 'பிரஷ்' ஒரு நோக்கத்துக்காகவே உடைந்தது என்பதை அவர் அப்பொழுது உணர்ந்தார். அவர் கன்னங்களில் கண்ணீர் வடிய அங்கு நின்றார். அவர், ''அந்த ஸ்திரீகள் கூறினது ஒருக்கால் உண்மையாயிருக்கக்கூடும். என் தேவனுடன் நான் பேசிக் கொண்டிருப்பதை யாராகிலும் கண்டுவிட்டால் அது பெருத்த அவமானம் என்று எண்ணினேன். ஆனால் அதே சமயத்தில் என் முதலாளியிடம் நான் பேசிக் கொண்டிருப்பதை யாராகிலும் காண்பது கெளரவமானது என்று கருதினேன். என் ஆண்டவர் என் முதலாளியை விட எவ்வளவு பெரியவர்'' என்றார். அவர், ”ஆண்டவரே என்னை மன்னியும், என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்பும்“ என்று சொல்லிவிட்டு கூச்சலிடவும் சத்தமிடவும் தொடங்கினார். அவர் தேவனுடைய சமுகத்தில் இருந்தார். அவர் வேகமாக அலுவலகத்துக்கு ஓடினர். அவர் அதிகமாக கூச்சலிட்டபடியால், அவர் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டு, ”ஆண்டவரே, உமக்கு நான் அவமானத்தை வருவிப்பேன். இந்த கூச்சலிடுதல் முடிவு பெறும் வரைக்கும், என்னை அங்கு ஒளித்து வையும்“ என்றார். ஏன்? அவர் தேவனுடைய பிரசங்கங்களையே மறுபடியும் பிரசங்கம் செய்தார். ஆத்துமாக்கள் பீடத்தண்டையில் வந்தன. பாருங்கள், அவர் தேவனுடைய சமூகத்தில் இருந்தவர். 59மூடி (Moody), காலணிகள் தைப்பவர், அவருக்கு மொழியின் முதலெழுத்துக்கள் கூட தெரியாது. அது உண்மை. அவருடைய இலக்கணம் மிகவும் மோசமாயிருந்தது. யாரோ ஒருவர் ஒருநாள் அவரிடம், ''திரு. மூடி, உம்முடைய இலக்கணம் மிகவும் மோசமாயுன்ளது“ என்றாராம். அதற்கு அவர், “இருப்பினும் அதைக் கொண்டு நான் ஆத்துமாக்களை வெல்கிறேன்” என்று பதிலுரைத்தார். ஒரு நாள் ஒரு செய்தித்தாள் ஆசிரியர், இந்த மனிதன் எவ்விதம் எந்த சூழ்நிலையிலும் திரளான ஜனங்களைத் தன் கூட்டங்களில் பெற முடிகிறது என்று அறிய அங்கு சென்றிருந்தார். சிறு உருவம் படைத்த ஒரு மனிதன், வழுக்கை மண்டை, தாடி கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது, பானை போல பெரிய தொந்தியுள்ளவர், காண்பதற்கு மிகவும் அவலட்சணமானவர். இந்த செய்தித்தாள் ஆசிரியர் அவரைக் குறித்து, “ட்வைட் மூடியில் ஜனங்கள் என்ன காண்கின்றனர் என்று எனக்குப் புரியவில்லை. அவர் காண்பதற்கு விகாரமானவர், அவருடைய குரல் கீச்சென்றுள்ளது, அவருடைய தாடி இடுப்பு வரைக்கும் தொங்கிக் கொண்டிருக்கிறது, அவருடைய மண்டை பூசணிக்காயைப் போல் வழுக்கையாயுள்ளது. ஜனங்கள் ஏன் இவரைக் காணச் செல்கின்றனர்?” என்று எழுதினார். மூடியின் மேலாளர் இதைக் காண நேர்ந்தது. அவர், “திரு. மூடி, இதை நான் உங்களுக்குப் படித்துக் காட்டுகிறேன்” என்றார். மூடிக்கு படிக்கத் தெரியாது. எனவே அவர், “ஆசிரியரின் கருத்துக்களை நான் படிக்கிறேன்” என்றார். அவர் அந்த விதமாக எழுதியிருந்தார். அதைக் கேட்ட மூடி தோள்களை மேலே தூக்கி, ''நிச்சயமாக அவர்கள் என்னைக் காண வரவில்லை. அவர்கள் கிறிஸ்துவைக் காண வருகின்றனர்“ என்றார். அவ்வளவுதான். ஏன்? அவர் தேவனுடைய சமுகத்தில் இருந்தவர். தேய்ந்து போகும் காலணிகளை ஜனங்களுக்காக உண்டாக்குவதை அவர் விட்டு, ஆயத்தம் என்னும் சுவிசேஷத்திற்குரிய பாதரட்சையை ஜனங்களின் கால்களில் கொடுத்தார். ஏன்? அவர் தேவனுடைய சமுகத்தில் இருந்தார். உண்மை. 60ஒரு ஸ்திரீ ஒரு முறை தேவனுடைய சமுகத்தில் வந்தாள். அவள் குற்றம் புரிந்தவள். அவள் தேவனுடைய சமூகத்தில் இருப்பதை உணர்ந்த அந்த நொடிப்பொழுதிலேயே, அவளுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, லீலிப்புஷ்பத்தைப் போல் தூய்மையும் வெண்மையுமானாள். ஓ, என்னே! இவ்விதம் நான் எத்தனையோ பேர்களை சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் நேரமில்லை. என்னைக் குறித்து சிறிது பேச விரும்புகிறேன். என்னைக் காட்டிலும் தாழ்வானவர் யார் இருக்க முடியும்? நான் எங்கிருந்தேன்? நான் குடிகாரரின் குடும்பத்திலிருந்து, கொலைகாரரின் குடும்பத்திலிருந்து, கள்ளச் சாராயம் கடத்தி விற்கும் குடும்பத்திலிருந்து வந்தவன். அது உங்களுக்குத் தெரியும், எங்களுக்கு எவ்வளவு மோசமான பெயர் இருந்ததென்று உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஜனங்கள் எங்களைத் தெருவில் சந்திக்கும்போது பேசக்கூட மாட்டார்கள். நான் கீழேயுள்ள நகருக்குச் சென்று, யாரிடமாவது பேச முனைந்தால், யாருமே என்னிடம் பேசமாட்டார்கள். வேறு யாருமே அங்கு இல்லாமல் போகும் பட்சத்தில் அவர்கள் என்னுடன் பேசுவார்கள். ஆனால் யாராகிலும் வந்துவிட்டால், என்னை விட்டுச் சென்றுவிடுவார்கள். நான் அங்கு நின்று கொண்டு, “இது இப்படி இருக்கக் கூடாது, இது தவறு” என்று சொல்லி அழுவேன். 61ஆனால் ஒரு நாள் தேவனுடைய சமுகத்தில் வந்தேன். அவர் என்னை மாற்றினார், அவர் என்னை வேறு விதமான குமாரனாகச் செய்தார். அவருடைய கிருபையே என்னை அவருடைய சமுகத்தில் கொண்டு வந்தது. அதை விட்டுப் பிரிய எனக்கு மனமில்லை. நான் அதில் முப்பது சொச்சம் ஆண்டுகளாக இருந்து வருகிறேன், அதை நான் விட்டுப்பிரிய மாட்டேன். நான் எப்பொழுதும் அதில் நிலைத்திருப்பேன் என்னும் உறுதியைப் பெற்றிருக்கிறேன். மரணமும் கூட என்னை அவருடைய சமுகத்தை விட்டுப் பிரிக்கமுடியாது. நான் என்றென்றைக்கும் அவருடன் கூட இருப்பேன். அவருடைய சமுகத்தை நான் முதன்முறை கண்டபோது நான் ஏசாயாவைப் போல “ஐயோ! அதமானேன்” என்று கதறினேன். அப்பொழுது அவர் தமது கிருபையினால் என்னைத் தொட்டார். நான் மாறின மனிதனானேன், வெளியே சென்று எல்லாவற்றையும் செய்து வந்த துரோகி மாறினான். அன்று முதல் நான் அவருடைய பிள்ளையாக இருந்து வருகிறேன். அன்று முதல் என் வாழ்க்கை முழுவதையும் அவருடைய ஊழியத்துக்காக அர்ப்பணிக்க நான் விருப்பம் கொண்டிருக்கிறேன். அவருக்காக கொடுக்க இன்னும் ஆயிரம் உயிர்கள் எனக்கிருந்தால் நலமென்று தோன்றுகிறது. இந்த வாழ்க்கை இப்பொழுது தேய்ந்து போய்விட்டது. ஐம்பத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. அதில் முப்பது மூன்று ஆண்டுகள், இல்லை முப்பத்து இரண்டு ஆண்டுகள், சுவிசேஷத்துக்காக செலவிடப்பட்டன. அவருக்கென்று செலவிட இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இருந்தால் நலமாயிருக்கும். ஏன்? ஒருமுறை அவருடைய சமுகத்தில் நான் வந்து, நேசிக்கத் தகாதவனை நேசிக்க ஒருவர் இருக்கிறார் என்பதை நான் உணர்ந்த போது; யாருமே என்னை நேசிக்காத போது, ஒருவர் என்னை நேசித்தார். யாருமே என் மேல் கவலை கொள்ளாதபோது, ஒருவர் எனக்காக கவலை கொண்டார். அவருடைய சிலுவையைச் சுற்றி என் கரங்களைப் போட்டு, அதை என்னுடன் சேர்த்து தழுவிக் கொண்டேன். அப்பொழுது நானும் அவரும் ஒன்றாகிவிட்டோம். அன்று முதல் அவரை நான் நேசித்து வருகிறேன். அவர் என் மார்பிலும் என் இருதயத்திலும் தமது இரத்தத்தை பதியச் செய்து, என்னைத் தொட்டு என் பாவங்களை மன்னித்தார். இன்றிரவு நான் அவருடையவர்களில் ஒருவனாக இருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். சோதனைக்காரன் எத்தனையோ முறை இதை விட்டு நான் அகல வேண்டுமென்று என்னைத் தூண்ட முயன்ற போதிலும், இந்த பரலோக இடத்தை விட்டுவிலக எனக்கு விருப்பமில்லை. நான் தேவனுடைய கூடாரத்தில் பாதுகாப்பாயிருந்து, அவருடைய அன்பிலும் கிருபையிலும் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். நான் அல்லேலூயா பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னே! அது என் இருதயத்தை களிகூரச் செய்கிறது. 62சோர்ந்துபோயிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் அவரை நான் சிபாரிசு செய்கிறேன். நம்பிக்கையற்ற உங்களுக்கு அவரை நான் சிபாரிசு செய்கிறேன். இது வரைக்கும் அவருடைய சமுகத்தில் வராதவர்களே, நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உங்கள் தவறுகளை உணர்வதே. தேவன் பரிசுத்த ஆவி என்றழைக்கப்படும் தூதனை இன்றிரவு நியமித்திருக்கிறார். அந்த தூதன் உங்கள் பாவங்களையெல்லாம் நீக்கிப்போடுவார். அப்பொழுது நீங்கள் “ஆண்டவரே, இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்று கூறுவீர்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் கரங்களையுயர்த்தி, %“அவரை நான் துதிப்பேன்! அவரை நான் துதிப்பேன்! %பாவிகளுக்காக கொலையுண்ட ஆட்டுக்குட்டியானவரைத் துதிப்பேன். %சகல ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள், %ஏனெனில் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவிற்று“, என்று பாடுவீர்கள். அவரை நான் நேசிக்கிறேன். நீங்களும் அல்லவா? அவருடைய சமுகத்தில் வாழுதல்! 63இன்று காலை நான் சுகமில்லாதவனாய் பிரசங்கபீடத்துக்கு வந்தேன்... சென்ற வாரம் நான், இங்கு உட்கார்ந்திருக்கும் என் நண்பர்கள் சிலருடன் கெண்டக்கிக்கு சென்றிருந்தேன். நான் நீண்ட நாட்கள் அங்கு தங்க நேர்ந்திருந்தால், அவர்கள் நிச்சயமாக தங்கள் உபசரணையால் என்னைக் கொன்றிருப்பார்கள். அவர்கள் மிகவும் சிறந்த சமையல்காரர்கள். என் வாழ்நாளில் அவர்களைப் போன்றவர்களை நான் அறிந்திருக்கவில்லை. நான் போதிய அளவு உண்ட பின்பு என் வயிற்றை அதிகமாக நிறைக்க, “சகோ. பிரன்ஹாமே, இதில் இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்களேன்”, என்பார்கள். அது மிகவும் ருசியாக இருந்ததால், நான்அளவுக்கு மீறி வயிறு புடைக்க சாப்பிட்டேன். என்னால் அசையவும் கூட முடியவில்லை. என்னால் தூங்க முடியாமல் எழுந்து அங்குமிங்கும் சற்று நேரம் நடந்து கொண்டிருந்தேன். இன்று காலை இங்கு நான் வந்தபோது, எனக்கு நல்ல சுகமில்லை. ஆனால் ஒரு முறை அவருடைய சமுகத்தில் வரும்போது, அத்துடன் அது முடிவடைந்தது. அதெல்லாம் மறைந்து போனது, அது உண்மை . ஓ, அவருடைய சமுகத்தில் வாழ்வதென்பது! %அவரை நான் துதிப்பேன், அவரை நான் துதிப்பேன், %பாவிகளுக்காக கொலையுண்ட ஆட்டுகுட்டியானவரைத் துதிப்பேன். %சகல ஜனங்களே, அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள் %ஏனெனில் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவிற்று இப்பொழுது நாம் தலைவணங்குவோம் (சகோ. பிரன்ஹாம் மெளனமாக இசைக்கிறார் - ஆசி) %அவர் எனக்கு எவ்வளவோ செய்திருக்கிறார் %அவர் என் அக்கிரமங்களை மன்னித்திருக்கிறார் அவருடைய இரத்தம் என் பாவங்களைக் கழுவினது %அவரை நான் துதிப்பேன். அவரை நான் துதிப்பேன் %பாவிகளுக்காக கொலையுண்ட ஆட்டுக்குட்டியான வரைத் துதிப்பேன் %சகல ஜனங்ளே அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள் %ஏனெனில் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவிற்று (சகோ. பிரன்ஹாம்: வாய்மூடி மெளனமாக இசைக்கின்றார் - ஆசி..) 64இன்றிரவு நீங்கள் இங்கிருக்க நேர்ந்தால்... அவருடைய சமுகம் இங்குள்ளதென்று நானறிவேன். சற்று முன்பு அங்கு நான் நின்று கொண்டு, தேவ சபையைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு ஜெபம் செய்தபோது, பரிசுத்த ஆவியானவர் என் மேல் அசைவாடினார். அவளுடைய பெற்றோர் ஆண்டர்ஸன் தேவ சபை காம்ப் மைதானத்திலிருந்து வந்திருந்தனர். அந்த சபையின் மேற்பார்வையாளர், அந்த சிறுமி இரத்தப் புற்றுநோயால் உடனே மரித்து விடுவாள் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர் என்பதை அறிந்திருந்தார். அந்த இனிய சிறுமி உயிர் போகும் கடைசி கட்டத்தில் இருந்தாள். அவள் வந்து அவளுடைய சிறு கையை என்னிடம் நீட்டினபோது, அது வீங்கியிருந்தது. ஊசிகள் அதில் குத்தப்பட்டிருந்தன, அது நீல நிறமாயிருந்தது. அவளை நான் பார்த்த போது ஒரு தரிசனம் கண்டேன். அவளுடைய பெற்றோர் வெளியில் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. காம்ப்பில் இருந்த சபையின் மேற்பார்வையாளர் அந்த பிள்ளையை கொண்டு வரும்படி பெற்றோர்களிடம் கூறினார். நாம் சுகமளிக்கும் கூட்டம் நடத்தும்போது அவர்கள் வரலாம் என்று நினைத்திருந்தனர். நான் “பிள்ளையை இப்பொழுதே கொண்டு வாருங்கள்” என்றேன். அவ்விதம் கூற ஏவப்பட்டேன். 65நான் அங்கு நின்று கொண்டிருந்த போது , பரிசுத்த ஆவியானவர் முன் காலத்துக்குச் சென்று அந்த பெண்ணின் வரலாற்றை வெளியே கொண்டு வந்தார். இது எப்படி நடந்ததென்றும், அவர்கள் என்ன செய்தனர் என்றும் எடுத்துக் கூறினார். அந்த பெண்ணின் விருப்பம் என்னவென்பதையும், அதாவது அவள் பியானோ இசைப்பவளாக ஆக விரும்பினாள் என்றும் கூறினார். அதைக் கேட்ட தாய் ஏறக்குறைய அலறினாள். தகப்பனும், ''அது முற்றிலும் உண்மை'' என்றார். இப்பொழுது அவர்கள் காரில் உட்கார்ந்து கொண்டு இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களால் உள்ளே வர முடியவில்லை. இப்பொழுது அங்கு உட்கார்ந்து கொண்டு இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு பெரிய நிழல் திரை வந்து அந்த பெண்ணின் மேல் தொங்கினது. நான், “சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டாய்'' என்றேன். ”தேவனே, நீர் பட்சபாதமுள்ளவர் அல்ல. உம்முடைய ஊழியக்காரன் என்னும் முறையில், உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால், பின்ளையை விட்டு இந்த பிசாசை விரட்டுகிறேன்“ என்றேன். ஒரு பெரிய பிரகாசமான ஒளி அவளுடைய தலைக்கு மேல் அடித்தது. அது முடிந்துவிட்டது ஆமென். என்ன? நிச்சயமாக அவர் எல்லா துதிக்கும் பாத்திரராயிருக்கிறார்! 66அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் உங்கள் இருதயத்தை அறிந்திருக்கிறார். நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். அது அவருக்கும் தெரியும். இன்றிரவு உங்களை ஒரு சிறு பாவம் பற்றிக் கொண்டிருந்தால், அதனுடன் நீங்கள் தேவனுடைய சமுகத்துக்கு செல்ல விரும்பாமலிருந்தால், நீங்கள் இன்னும் ஒரு முறை உங்கள் கைகளையுயர்த்தி,“சகோ. பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள். அந்நாளில் நான் அவருடைய சமுகத்தில் குற்றமற்றவனாக இருக்க விரும்புகிறேன்,” என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அநேக கைகள். தேவன் அதைக் காண்கிறார். அவருடைய சமுகத்தில். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். உன்னிப்பாக கவனியுங்கள். தாவீது செய்தது போல் செய்யுங்கள், கர்த்தரை இப்பொழுதே உங்களுக்கு முன்பாக வையுங்கள் - உங்களை சூழ்ந்து நிற்கும் பாவம் எதுவாயிருந்தாலும்- அது ஒருக்கால் பொய் சொல்லுதலாக இருக்கலாம். அல்லது திருடுவதாக இருக்கலாம், அது ஒருக்கால் பொல்லாத சிந்தனையாக இருக்கலாம். கோபமாக இருக்கலாம், மது அருந்துதலாக இருக்கலாம், புகை பிடித்தலாக இருக்கலாம், சூதாடுதலாக இருக்கலாம். அது என்னவென்று எனக்குத் தெரியாது. அது ஒருக்கால் இச்சையாக இருக்கலாம், அல்லது வேறெதாவதாக இருக்கலாம். அது என்னவென்று எனக்குத் தெரியாது. அது எதுவாயிருந்தாலும், கர்த்தரை உங்களுக்கு முன்பாக வையுங்கள். அப்பொழுது உங்கள் இருதயம் பூரிக்கும், உங்கள் மாம்சம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். ஏனெனில் கிறிஸ்து கடைசி நாட்களில் மறுபடியுமாக எழும்புவதாக வாக்களித்திருக்கிறார். அவர் வரும் போது, அவருடைய சாயவில் நாம் வருவோம். இப்பொழுது ஜெபிக்கும்போது அதை செய்வீர்களா? 67எங்கள் பரலோகப் பிதாவே, களைத்துப் போன உம்முடைய ஊழியக்காரன் அளித்த துண்டு துண்டான சிறு செய்தி. நாங்கள் தேவனுடைய சமுகத்தில் வாசமாயிருத்தல் என்னும் பொருளைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தோம். பரிசுத்த மனிதர் உம்முடைய சமுகத்தில் வந்ததனால் உண்டான விளைவை இன்றிரவு நாங்கள் கண்டோம், அது அவர்கள் மேல் என்ன விளைவை உண்டாக்கினதென்று, தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு வார்த்தையைப் பிரசங்கிக்க அனுப்பப்பட்ட மகத்தான வல்வமையுள்ள தீர்க்கதரிசிகள் அவரை முகமுகமாய் சந்தித்தபோது மரித்தவரைப் போல் தரையில் விழுந்தனர். அப்படியிருக்க, கர்த்தாவே, அந்நாளில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? அதை நாங்கள் சிந்தித்துப் பார்த்தோம். அதைக் குறித்து நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தோம். கர்த்தாவே, நாற்பது அல்லது ஐம்பது கைகள் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தன. அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி, அவைகளின் கீழுள்ள இருதயங்கள், நாங்கள் இதைக் குறித்து பேசின முதற்கொண்டு, அவரைச் சந்திப்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தன. அவரைச் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? 68கர்த்தாவே, என் கரங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. நான் என்ன செய்வேன்? இப்பொழுதும், பிதாவே, நான் அநேக தவறுகளைச் செய்திருக்கிறேன். அன்றொரு காலை மலையின் உச்சியில் காற்று பலமாக அடித்து பனி பெய்து கொண்டிருந்த போது, நான் அழுது என் பாவங்களை அறிக்கையிட்டு, என் முட்டாள்தனத்தை மன்னிக்க வேண்டிக் கொண்டது போல, இன்று காலை நான் சபைக்கு முன்பாக என் பாவத்தை அறிக்கையிட்டேன். என் சகோதரருக்கு முன்பாக வருவதற்கு நான் எவ்வளவாக பயந்தேன், அவர்களில் சிலர் என்னை உமது தீர்க்கதரிசி - ஊழியக்காரனாகக் கருதுகின்றனர். ஒரு முட்டாள் தனமான செயல்ப் புரிந்ததாக அவர்களுக்கு முன்பாக வந்து கூற எனக்குப் பிரியமில்லை. ஆனால் தேவனே, என் பாவங்களை நான் அறிக்கையிட்டு அவைகளை மறைக்காமல் இருப்பது என் ஆத்துமாவுக்கு நல்லது. எனவே கர்த்தாவே, உமக்கு முன்பாக நேர்மையாயிருக்கவும், அதை நான் அறிக்கை செய்துவிட்டேன். நான் செய்தது தவறு, நான் அறிக்கை செய்துவிட்டேன். நான் செய்தது தவறு. அது முற்றிலும் தவறு. நான் மன்னிப்பை வேண்டுகிறேன். 69அதன் பிறகு, பிதாவே, உமது ஊழியத்தை நான் மெள்ள செய்தேன். எத்தனையோ முறை நான் இன்னும் அதிக நேரம் செய்திருக்கலாம், அதை நான் செய்யவில்லை. பிதாவே, என் பாவங்களை நான் அறிக்கையிடுகிறேன். தேவனுடைய தூதன் அதிலிருந்து என்னை இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இன்றிரவு உயர்த்தப்பட்ட கரங்களில், சிலர் இதற்கு முன்பு மன்னிப்பு கேட்காமல் இருந்திருக்கக் கூடும். ஆனால் ஒன்றைக் குறித்து நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அதாவது நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், தேவன் அவைகளை நீக்கி, அவைகளை மறதியின் கடலில் போட்டு விட்டு அவைகளை ஒரு போதும் நினையாமல் இருப்பார். பிதாவே, ஜனங்களுக்கு முன்பாக தவறாக நடந்து கொண்ட குற்றத்தை நான் அறிக்கையிடுகிறேன். நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்பது போல் நடந்து கொள்ளவில்லை. மனிதர் என் மேல் கோபங் கொள்வார்கள் என்று பயந்து, அவர்களைப் புண்படுத்தக் கூடாதென்று எண்ணினேன். ஆனால் கர்த்தாவே, உமக்கு நான் என்ன செய்கிறேன் என்பதை அப்பொழுது நினைத்துப் பார்க்கவில்லை. என்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். இப்பொழுதும் பிதாவே, நான் மன்னிப்பைக் கேட்டால் அதை பெற்றுக் கொள்வேன் என்றும், நீர் அதை மறதியின் கடலில் போட்டு விட்டு, அதை ஒருபோதும் நினையாமல் இருப்பீர் என்றும் அறிந்திருக்கிறேன். தேவனே, அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 70இங்கு பாவம் அல்லது சூழ்ந்து நிற்கும் பாவத்தைக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் அதைப் போக்கிக்கொண்டு, தாவீதைப் போல் கர்த்தரைத் தங்களுக்கு முன்பாக வைக்கும்படி நீர் செய்ய வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்கிறேன். இப்பொழுது நாங்கள், “ஐயோ அதமானேன், நான் தேவனுடைய மகிமையைக் கண்டேன். நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், ஸ்திரீ, பெண், பையன்'' என்று கதறுகிறோம். நாங்கள் யாராயிருந்தாலும், நாங்கள் அசுத்தமானவர்கள், பாவத்திற்குப் பலியாக செலுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களிலிருந்தும் எங்களை சுத்திகரிக்கவும், நாங்கள் அவருடைய சமூகத்தில் வாழ அருள் செய்ய வேண்டுமென்றும் வேண்டிக்கொள்கிறோம். எங்கள் இருதயங்கள் பூரிப்படைந்து எங்கள் மாம்சம் நம்பிக்கையோடே தங்கினதாய் நாங்கள் இவ்விடம் விட்டுச் செல்வோமாக. அப்படியானால் இயேசு வரும்போது நாங்கள் அவரைப்போல அவருக்குள் அவரை எடுத்துக் கொள்ளப்படுதலில் நடு ஆகாயத்தில் சந்திப்போம் என்று அறிந்திருக்கிறோம். ஏழாம் சபையின் காலம் ஏற்கனவே எண்ணப்பட்டுவிட்டது என்றும், இப்பொழுது புறப்பட ஆயத்தமாயிருக்கிறோம் என்றும் நாங்கள் காண்கிறோம். தேவனே, நீர் கதவை அடைக்கும் முன்பு, உள்ளே வராத ஒருவர் இன்றிரவு இங்கிருப்பாரானால், அவர்கள் விரைவார்களாக. ஏனெனில் இரக்கத்துக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையேயுள்ள இரக்கத்தின் கதவு அடைபட்டு வருகிறதென்று நாங்கள் உணருகிறோம். இரக்கத்தை ஏற்றுக் கொள்பவர்கள் உள்ளே வருவார்கள். உள்ளே வராதவர்கள் நியாயத்தீர்ப்பு அடைவார்கள். தேவன் கதவை அடைக்கிறார். பாவங்களை இன்றிரவு அறிக்கையிட்டவர்களுக்கு கதவு அடைபடாமல் இருப்பதாக. நாங்கள் அனைவரும் மன்னிப்பையும் இரக்கத்தையும் பெறுவோமாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 71இப்பொழுதும், பிதாவே, வியாதியஸ்தருக்கும், அவதியுற்றோருக்கும், தேவையுள்ளவர்களுக்கும், உமது கிருபை அவர்களுடைய தேவையனைத்தையும் தர வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவர்கள் கிறிஸ்துவுக்குள் நுழைந்து அவருடைய சமுகத்தில் வருவார்களாக. வாக்குத்தத்தமாகிய கிறிஸ்துவை உங்களுக்கு முன்பாக வையுங்கள். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்,” மீறுதல்கள் என்பது என் பாவம். 'அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்'. அதன் பிறகு கர்த்தரை என் வியாதிக்கு முன்பாக வைக்கிறேன். 'அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால், நான் அசைக்கப்படுவதில்லை'. அதன்பிறகு, நான் குணமானேன் என்று அறிக்கையிட்டு தைரியமாக நடந்து செல்கிறேன். “அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்” பிதாவே, இதை இங்குள்ள ஒவ்வொருவருக்கும் அருளுவீராக. நாங்கள் எங்கள் இருதயங்களினால், இல்லை. எங்கள் வாயினால் அறிக்கையிட்டு, எங்கள் இருதயங்களில் விசுவாசித்தால், நாங்கள் கேட்டுக் கொள்வதைப் பெற்றுக் கொள்வோம் என்று அறிந்திருக்கிறோம். “நீங்கள் எதையாகிலும் கேட்டால், அதைப் பெற்றுக் கொண்டோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் கேட்டது உங்களுக்கு அருளப்படும்'' என்று நீர் உரைத்திருக்கிறீர். பிதாவே, அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். கர்த்தாவே, நீர் எங்களை எல்லா பாவங்களினின்றும் சுத்திகரித்து, எங்கள் வியாதியை சுகப்படுத்தி, உம்மை சேவிக்க எங்களுக்கு கிருபையை அருளுவீர் என்று விசுவாசிக்கிறோம். 72இந்த ஜனங்களோடு கூட இருப்பீராக. இவர்களில் அநேகர் இன்றிரவு இருளான சாலைகளின் வழியாக பிரயாணம் செய்ய வேண்டியவர்கள். இவர்களில் அநேகர் வெகு தூரம் பிரயாணம் செய்ய வேண்டும். கர்த்தாவே, அவர்களுக்கு ஆபத்து ஒன்றும் நேரிடாதபடிக்கு பாதுகாத்தருளும். அவர்கள் இங்கு உட்கார்ந்து கொண்டு இறங்கு வரிசை எண்ணுதலைக் கேட்கவும், நாம் முடிவு காலத்துக்கு எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளவும் நாடு கடந்து வந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு முன்பாக அவரை வைத்து, வேறெதற்கும் அவரை வைத்து, இங்கிருந்து செல்லும்படி கூறிவிட்டேன். அவர்களுடைய பிரயாணத்துக்கு முன்பும், அவர்கள் அசைவதற்கு முன்பும், அவர்கள் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்பும், தேவனை முதலாவது வைக்க வேண்டும். “அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால், நான் அசைக்கப்படுவதில்லை. அப்பொழுது அவர்கள் கேட்டதைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதை அறிந்தவர்களாய், அவர்களுடைய இருதயங்கள் பூரிக்கும், ஏனெனில் தேவன் அதை வாக்களித்துள்ளார், அவர்களுடைய மாம்சம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். கர்த்தாவே, இதை அருளும், இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். அவரை நான் துதிப்பேன், அவரை நான் துதிப்பேன் பாவிகளுக்காக கொலையுண்ட ஆட்டுகுட்டியானவரைத் துதிப்பேன் சகல ஜனங்களே அவருக்கு மகிமையைச் செலுத்துங்கள் ஏனெனில் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவிற்று 73நீங்கள் கர்த்தரை உங்களுக்கும் உங்கள் பாவத்துக்கு இடையேயும், உங்களுக்கும் உங்கள் வியாதிக்கு இடையேயும், உங்களுக்கும் உங்கள் தவறுகளுக்கு இடையேயும், உங்களுக்கும் உங்கள் வழிகளுக்கு இடையேயும் வைத்திருக்கிறீர்கள் என்று இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? “கர்த்தர் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறார், நான் அவருடைய சமுகத்தில் இருக்கிறேன். அடுத்த முறை நான் சிகரெட்டை பற்ற வைக்கும் போது, கர்த்தர் எனக்கு முன்பாக இருக்கிறார். அடுத்த முறை நான் இச்சிக்கும் போது, கர்த்தர் எனக்கு முன்பாக இருக்கிறார். அடுத்த முறை நான் தவறான எதையாகிலும் கூறும் போது, கர்த்தர் எனக்கு முன்பாக இருக்கிறார். அடுத்த முறை நான் மோசமான ஒரு காரியத்தைக் கூறும் போது, கர்த்தர் எனக்கு முன்பாக இருக்கிறார். நான் அசைக்கப்படுவதில்லை. ஆமென். நான் ஒவ்வொரு நாளும் என் நடத்தையிலும் என் பேச்சிலும் அவருடைய சமுகத்தில் வாழுவேன். கர்த்தர் எனக்கு முன்பாக இருப்பதை மனதில் கொண்டு நடப்பேன். ஏனெனில் அவரை எனக்கு முன்பாக வைத்துவிட்டேன். நான் அசைக்கப்படுவதில்லை''. அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? 74இப்பொழுது நாம் எழுந்து நிற்போம். ஒ, எனக்கு உண்மையில் நல்லுணர்வு தோன்றுகிறது. எனக்கு வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று தோன்றவேயில்லை. உங்களுக்கு தெரியுமா, ஒன்பது மணி ஆக இன்னும் இருபத்தைந்து நிமிடங்கள் உள்ளன. நான் இரண்டு மணி நேரம் சீக்கிரம் முடித்து விட்டேன். அது அற்புதமல்லவா? ஒ, என்னே! இப்பொழுது நாம் புறப்பட்டுச் செல்லும் போது, நாம் இயேசுவின் நாமத்தை நம்முடன் கொண்டு செல்லவேண்டும் என்பதை நினைவில் கொள்வோம், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக நம்மை சோதனைகள் சூழும் போது, நிலைத்திருக்க... நம்மை உண்மையுள்ளவர்களாய் வைக்க, அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துன்பமும் துயரும் உள்ள பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் ஓ, நீ போகும் இடமெல்லாம் அதைக் கொண்டு செல் விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்), ஓ, என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்! விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்), ஓ, என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாய்! 75எத்தனை பேர் நமது போதகர், சகோ. நெவிலின் ஊழியத்தை ரசிக்கிறீர்கள்? அப்படிப்பட்ட ஒரு நல்ல நேர்மையான அன்புள்ள மனிதனுக்காக நீங்கள் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள். அல்லவா? அவர் சுவிசேஷத்தை விசுவாசித்து, தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, வார்த்தையைப் பிரசங்கித்து, எப்பொழும் ஆவிக்குரிய சூழ்நிலையை சபையில் காத்து, அருமையான பணியைச் செய்து கொண்டு வருகிறார். ஞாபகம் கொள்ளுங்கள், நான் கிழக்கு கரைக்குச் சென்றிருக்கிறேன், தெற்கு முழுவதிலும், மேற்கு கடற்கரையிலும் கனடா முழுவதிலும் சென்றிருக்கிறேன். ஆனால் இந்த சபையைப் போன்ற ஒரு ஆவிக்குரிய சபையை நான் கண்டதில்லை. அவர்கள் தொடக்கத்துக்கு அல்லது மூடபக்தி வைராக்கியத்துக்கு, அல்லது ஏதோ ஒருவிதமான ஆவேசத்துக்கு (tantrums) சென்றுவிட்டனர். அல்லது அவர்கள் மிகவும் குளிராகி, அசைக்கப்பட முடியாத நிலையை அடைந்துவிட்டனர். அவ்வளவுதான். இப்பொழுது, நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறீர்களா? ஓ, ஒருவரோடொருவர் கை குலுக்கி “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லுங்கள். (சகோ. பிரன்ஹாமும் கர்த்தரை ஸ்தோத்தரித்து, கைகளை குலுக்கி, ஜனங்களுடன் பேசுகிறார் - ஆசி). இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக உன்னை சோதனைகள் சூழ்ந்து கொள்ளும் போது (நீ என்ன செய்வாய்?) அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி.. விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாய் விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்) ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாய். 76இப்பொழுது நாம் தலைவணங்கி, மிகவும் மிருதுவாக - அதை மறந்து போகவேண்டாம் - அந்த சரணத்தை மறுபடியும் பாடுவோம். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் (எதற்காக) ஒவ்வொருகண்ணிக்கும் கேடயமாக (சாத்தான்உனக்கு கண்ணியை வைக்கும் போது) உன்னைசோதனைகள் சூழ்ந்து கொள்ளும் போது (நீ என்ன செய்வாய்?) (“கர்த்தர் எனக்கு முன்பாக இருக்கிறார், நான் அசைக்கப்படுவதில்லை) விலையுயர்ந்த நாமம் (விலை யுயர்ந்த நாமம்), ஓ என்ன இனிமை! ஆமென்.